வேகமாக நடந்தால் நோய்களும் வேகமாக ஓடிவிடுமாம்: வியக்க வைக்கும் ஆய்வு முடிவுகள்

Benefits of Walking Fast: சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நடை வேகத்தை ஆரோக்கியத்துடன் இணைக்கும் சில விஷயங்கள் பற்றி தெரிய வந்துள்ளன. வேகமாக நடப்பவர்களுக்கு பல நோய்களின் அபாயம் குறைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 28, 2024, 06:47 PM IST
  • உங்களுக்கு நடக்கும் பழக்கம் உள்ளதா?
  • வேகமாக நடக்கும் நபர்களில் நீங்களும் ஒருவரா?
  • அப்படியென்றால், உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது.
வேகமாக நடந்தால் நோய்களும் வேகமாக ஓடிவிடுமாம்: வியக்க வைக்கும் ஆய்வு முடிவுகள்

Benefits of Walking Fast: நம் உடல் ஆரோக்கியமாக இருக்க, சமச்சீரான உணவை உட்கொள்வதும், உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வதும் மிக முக்கியமாகும். அதாவது, சமச்சீரான உணவை உட்கொள்வதுடன் தினமும் சிறிது நேரம் உடல் செயல்பாடுகளும் மிக முக்கியமாகும். உடல் செயல்பாடுகளில் ஈடுபட நடப்பது மிக எளிய வழியாக கருதப்படுகிறது. நடைபயிற்சி பல அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இது நம் உடலின் ஃபிட்னசை பராமரிக்கின்றது. 

Add Zee News as a Preferred Source

உங்களுக்கு நடக்கும் பழக்கம் உள்ளதா? வேகமாக நடக்கும் நபர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியென்றால், உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நடை வேகத்தை ஆரோக்கியத்துடன் இணைக்கும் சில விஷயங்கள் பற்றி தெரிய வந்துள்ளன. வேகமாக நடப்பவர்களுக்கு பல நோய்களின் அபாயம் குறைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

காலையிலோ அல்லது மாலையிலோ நடப்பது நல்லது. ஆனால் பிரத்யேகமாக நடக்க நேரம் இல்லையென்றால் பகலில் உங்கள் வேலைக்கு இடையில் முடிந்தவரை நடக்க முயற்சிக்கவும். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், மனிதர்களின் நடை வேகத்தை அளந்து, அதிவேகமாக நடப்பதன் மூலம் எந்தெந்த உடல்நலப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம் என்றும், உடல் பருமனால் அவதிப்படுபவர்களுக்கு எப்படி இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆய்வில் என்ன தெரியவந்துள்ளது?

ஆய்வில் கலந்துகோண்டவர்களின் நடை வேகம், வயது மற்றும் பாலினத்திற்கு ஏற்ப அதிகமாக உள்ளதா என்று ஆராயப்பட்டது. இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில், வேகமாக நடப்பவர்களுக்கு இதயம் தொடர்பான பிரச்சனைகள், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் ஆகியவை மிகக் குறைவாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

நீரிழிவு நோய், இதய நோய்கள் (Diabetes, Heart Problems)

வேகமாக நடப்பவர்களுக்கு நீரிழிவு நோய்க்கான ஆபத்து 30 சதவீதம் குறைவாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர, விறுவிறுப்பான நடைப்பயிற்சி உயர் இரத்த அழுத்தம் (Blood pressure) மற்றும் டிஸ்லிபிடெமியாவைக் குறைக்கிறது. அதாவது வேகமான நடை இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.

மேலும் படிக்க | உடல் திடமாக வேண்டுமா... ஆரோக்கியத்தை வாரிவழங்கும் மசாலா டீ; நாலு 'நச்' நன்மைகள்!

கார்டியோஸ்பிரேட்டரி ஃபிட்னஸ் நன்றாக இருக்கும்

வேகமாக நடப்பது கார்டியோஸ்பிரேட்டரி ஃபிட்னஸை (உடல் செயல்பாடுகளின் போது தசைகளின் மைட்டோகாண்ட்ரியாவுக்கு ஆக்ஸிஜனை வழங்கும் சுவாச அமைப்பின் திறன்) மேம்படுத்துகிறது. இதனால் ஆக்சிடேடிவ் ஸ்ட்ரெஸ் மற்றும் அழற்சி குறைகிறது.

உடல் எடை குறையும் (Weight Loss) 

வேகமாக நடப்பது உடலில் சேர்ந்துள்ள கலோரிகளை வேகமாக குறைக்க உதவுகின்றது. வேகமாக நடக்கும் போது தொப்பை, இடுப்பு, தொடை ஆகிய இடங்களில் சேர்ந்துள்ள கூடுதல் கொழுப்பு குறிப்பாக வேகமாக குறைவதாக கூறப்படுகின்றது. உடல் பருமனால் பாதிக்கப்படுபவர்களுக்கு வளர்சிதை மாற்ற நோய்களின் ஆபத்து அதிகமாக இருக்கும். வேகமான நடப்பவர்கள் இந்த ஆபத்தை குறைக்கலாம்.

கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும் 

கெட்ட கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு வேகமான நடை பெரிய அளவில் உதவும். கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளவர்கள் தினமும், வேகமான நடைபயிற்சி மெற்கொண்டால் அது கொலஸ்ட்ரால் எரிக்கும் செயல்முறையை இன்னும் வேகமாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த வகையில் வேகமாக நடக்கும் பழக்கம் கொண்டவர்கள் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், டிஸ்லிபிடெமியா, அதிக கெட்ட கொலஸ்ட்ரால், உடல் பருமன் ஆகிய பிரச்சனைகளில் உடனடி நிவாரணம் பெறலாம், இவற்றை தடுக்கலாம் என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இந்த நான்கு பிரச்சனை இருப்பவர்கள் நெல்லிக்காய் சாப்பிடவே கூடாது..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News