பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை, தரக்குறைவாக விமர்சித்த, உ.பி. மாநில பா.ஜ. துணைத் தலைவர் தயா சங்கர் சிங்கை 6 ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்த பா.ஜ.க. மேலும் இச்செயலுக்காக பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டுள்ளது.
உத்தர பிரதேஷ் மாநில பாரதிய ஜனதாவின் துணைத் தலைவர் தயா சங்கர் சிங் அவர்கள் 'மாயாவதி தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களுக்கு சீட்டை விற்பது, பாலியல் தொழிலாளியை விட மோசமானது என சர்ச்சை கருத்து தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ராஜ்யசபாவிலும், இந்த விவகாரம் எதிரொலித்தது.சர்ச்சை பேச்சுக்காக மாயாவதியிடம் சங்கர் சிங் பகிரங்க மன்னிப்பு கேட்ட போதிலும் உ.பி., மாநில துணைத் தலைவர் பதவியிலிருந்து, சங்கர் சிங்கை பா.ஜ., தலைமை நீக்கியது. இதனிடையே பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் நடந்த கூட்டத்தில், தயா சங்கர் சிங்கை சஸ்பெண்ட் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சங்கர் சிங் கட்சியிலிருந்து 6 ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
முன்னதாக பகுஜன் சமாஜ் கட்சி கொடுத்த புகாரின் பேரில், தயா சங்கர் சிங்கின் மீது 153ஏ, 504, ஐ.பி.சி., 509, 310 ஆகிய எஸ்.சி.,/எஸ்.டி., சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.