Boeing 737 Max விமானத்தை இயக்க 90 SpiceJet விமானிகளுக்கு தடை: DGCA

சுமார் 90 ஸ்பைஸ்ஜெட் விமானிகள் மீண்டும் பயிற்சி பெறும் வரை போயிங் 737 மேக்ஸ் விமானத்தை இயக்க விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 13, 2022, 11:22 AM IST
Boeing 737 Max விமானத்தை இயக்க 90 SpiceJet விமானிகளுக்கு தடை: DGCA title=

புதுடெல்லி: சுமார் 90 ஸ்பைஸ்ஜெட் விமானிகள் மீண்டும் பயிற்சி பெறும் வரை போயிங் 737 மேக்ஸ் விமானத்தை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) இயக்குநர் ஜெனரல் அருண் குமார் தெரிவித்துள்ளார். “ போயிங் 737 MAX விமானத்தை இயக்க ஸ்பைஸ் ஜெட்டின் 90 விமானிகளுக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. டிஜிசிஏ திருப்தி அடையும் வகையில் அவர்கள் மீண்டும் பயிற்சி பெற வேண்டும்” என்று குமார் செய்தி நிறுவனமான ஏஎன்ஐயிடம் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த ஸ்பைஸ்ஜெட், இந்த கட்டுப்பாடு MAX விமானங்களின் செயல்பாடுகளை பாதிக்காது என்று கூறியது. 650 விமானிகளில் 560 பயிற்சி பெற்ற விமானிகள் தொடர்ந்து பணியில் இருப்பார்கள் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | ஜெட் எரிபொருள் விலை உயர்வு; இனி விமானப் பயண கட்டணமும் உயரும்
 

“இந்த கட்டுப்பாடு MAX விமானங்களின் செயல்பாடுகளை எந்த விதத்திலும் பாதிக்காது. ஸ்பைஸ்ஜெட் தற்போது 11 மேக்ஸ் விமானங்களை இயக்குகிறது. இந்த 11 விமானங்களை இயக்க சுமார் 144 விமானிகள் தேவைப்படுகின்றனர். MAX இல் பயிற்சி பெற்ற 650 விமானிகளில் 560 பேர் தொடர்ந்து பணியில் இருப்பார்கள்,” என்று SpiceJet ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | டெல்லி-தோஹா விமானம் QR579 கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News