Digital Health ID: இந்த கார்டை உருவாக்குவது எப்படி? இதன் பயன்கள் என்ன?

உங்கள் ஹெல்த் ஐடியை எவ்வாறு உருவாக்குவது? அதன் நன்மைகள் என்ன? இவற்றைப் பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 27, 2021, 05:04 PM IST
  • ஹெல்த் ஐடி-ஐப் பெற, உங்களுடன் ஆதார் எண்ணை வைத்திருப்பது அவசியமாகும்.
  • இணையதளம் அல்லது செயலியில் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட்ட பிறகு, ஒரு புதிய ஐடியை உருவாக்க வேண்டும்.
  • நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஐடிகளையும் உருவாக்கலாம்.
Digital Health ID: இந்த கார்டை உருவாக்குவது எப்படி? இதன் பயன்கள் என்ன? title=

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷனை (NDHM) வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடக்கி வைத்தார். இதன் கீழ் இந்தியர்கள் அனைவரும் தனித்துவமான டிஜிட்டல் ஹெல்த் ஐடியைப் (Unique Digital Health ID) பெறுவார்கள். இது நாட்டில் டிஜிட்டல் சுகாதார அமைப்பை உருவாக்கும்.

உங்கள் ஹெல்த் ஐடியை எவ்வாறு உருவாக்குவது? அதன் நன்மைகள் என்ன? இவற்றைப் பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் ஹெல்த் ஐடி-யை எவ்வாறு உருவாக்குவது?

தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷனின் (NDHM) கீழ் ஹெல்த் ஐடியை உருவாக்க, அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான Healthid.ndhm.gov.in-க்கு செல்லவும். அல்லது Google Play Store-லிருந்து ABDM Health Records app-ஐ பதிவிறக்கம் செய்துகொள்ளவும். இதற்குப் பிறகு, இணையதளம் அல்லது செயலி மூலம் உங்கள் ஐடியை உருவாக்கலாம்.

இது தவிர, அருகிலுள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனைக்குச் சென்றும் உங்கள் சுகாதார அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம். எனினும், ​​நீங்கள் உங்கள் சுகாதார அடையாளத்தை உருவாக்க விரும்புகிறீர்களா இல்லையா என்பது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது.

சுகாதார அடையாள அட்டைக்கு ஆதார் மற்றும் மொபைல் எண் தேவைப்படும்.

ஹெல்த் ஐடி-ஐப் பெற, உங்களுடன் ஆதார் எண்ணை வைத்திருப்பது அவசியமாகும். உங்கள் ஆதார் அட்டை உங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பதும் மிக அவசியம்.

ஆதார் அட்டை எண் கொண்டு சுகாதார அடையாள அட்டையை உருவாக்குவதன் நன்மை என்னவென்றால், விண்ணப்பிக்கும் போது, இணையதளம், பெரும்பாலான தகவல்களை ஆதார் எண்ணின் அடிப்படையில் தானாகவே புதுப்பித்துவிடும். ஆதார் எண்ணை பயன்படுத்த விரும்பவில்லை என்றால், நீங்கள் மொபைல் எண் கொண்டும் ஹெல்த் ஐடி-யை உருவாக்கலாம்.

பயனர் ஐடி (User ID) உருவாக்கப்பட வேண்டும்

இணையதளம் அல்லது செயலியில் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட்ட பிறகு, நீங்கள் ஒரு புதிய ஐடியை உருவாக்க வேண்டும். உதாரணமாக, POOJA@NDHM. இதில் @NDHM நிரந்தரமானது. அதாவது, இது ஏற்கனவே இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் ஐடி-க்கு மட்டும் ஒரு பெயரை சிந்தித்து பதிவு செய்ய வேண்டும்.

ALSO READ: டிஜிட்டல் ஹெல்த் ஐடி கார்டு: ஒரே கிளிக்கில் மருத்துவ வரலாறு..!!! 

இதற்குப் பிறகு உங்கள் வீட்டு முகவரி மற்றும் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும். அதன் பிறகு 14 இலக்க தனித்துவமான டிஜிட்டல் ஹெல்த் ஐடி (Unique Digital Health ID) உருவாக்கப்படும். இப்போது நீங்கள் இந்த ஐடியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த 14 இலக்க எண்ணை எங்காவது குறித்துக்கொள்வது நல்லது. நீங்கள் ஏதாவது அரசாங்க திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், இந்த ஐடி வரும் காலத்தில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஒன்றுக்கு மேற்பட்ட ஐடிகளை உருவாக்க முடியும்

நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஐடிகளையும் உருவாக்கலாம். உங்கள் உடல்நலத் தகவல்களில் ஏதேனும் ஒன்றை ரகசியமாக வைத்திருக்க விரும்பினால், நீங்கள் வெவ்வேறு ஐடிகளில் வெவ்வேறு தகவல்களை உள்ளிடலாம். இருப்பினும், உங்கள் அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் இருக்கும் வகையில் ஒரே ஒரு ஐடி வைத்திருப்பது நல்லது.

தற்போது, ​​நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் ஐடியை உருவாக்குவது மட்டும்தான். எனினும், இனிவரும் காலங்களில், நாட்டின் அனைத்து சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புகள் அதாவது மருத்துவமனைகள், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் தொடர்பான அனைத்து தகவல்களும் இந்த அமைப்புடன் இணைக்கப்படும். அடுத்த கட்டத்தில், நாட்டில் உள்ள அனைத்து மருந்தகங்களும் இதனுடன் இணைக்கப்படும்.

ஆதார் அட்டைக்குப் (Aadhaar Number) பிறகு இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சியாக இந்த ஹெல்த் ஐ.டி இருக்கக்கூடும். வரும் காலங்களில், எக்ஸ்-ரே, எம்ஆர்ஐ அறிக்கை, மருந்துச்சீட்டு போன்ற உங்கள் பதிவுகளையும் இதில் பதிவேற்ற முடியும். இந்த வசதி இப்போது கிடைக்காது. அரசாங்கத் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள விரும்பும் நபர்கள், அதற்கு தேவையான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். இந்த நபர்களுக்கு குறிப்பாக, இந்த வசதி மிகவும் உதவியாக இருக்கும்.

தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷனின் பயன் என்ன?

ஜன் தன், ஆதார் மற்றும் மொபைல் (JAM) ஆகியவை மற்றும் அரசின் பிற டிஜிட்டல் முன்முயற்சிகளின் வடிவத்தில் தயாரிக்கப்பட்ட உள்கட்டமைப்பின் அடிப்படையில், NDHM என்பது தரவு, தகவல் மற்றும் தகவல்களின் பாதுகாப்பு, சுகாதாரம் தொடர்பான தனிப்பட்ட தகவல்களின் இரகசியத்தன்மை மற்றும் தனியுரிமை ஆகியவற்றை உறுதி செய்கிறது. 

பிரதமரின் டிஜிட்டல் ஹெல்த் மிஷன் எதிர்கால தேவைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நோயாளிகளுக்கு மட்டுமல்ல, மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கும் பயனளிக்கும். காகித பயன்பாட்டை குறைப்பதோடு, இது, நோயாளிக்கு கடந்த காலத்தில் என்ன நோய் இருந்தது, அடுத்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மருத்துவரும் நன்கு புரிந்து கொள்ள உதவும்.

ALSO READ: பன்முகத்தன்மையே இந்தியாவின் அடையாளம் - ஐ.நா. பொதுஅவையில் பிரதமர் பெருமிதம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News