JNU மாணவர் சங்க தலைவியை நேரில் சந்தித்தார் கனிமொழி...

JNU வன்முறையில் தாக்கப்பட்ட JNU மாணவர் சங்க தலைவி ஐஷா கோஷை, திமுக MP கனிமொழி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Last Updated : Jan 8, 2020, 02:39 PM IST
JNU மாணவர் சங்க தலைவியை நேரில் சந்தித்தார் கனிமொழி... title=

JNU வன்முறையில் தாக்கப்பட்ட JNU மாணவர் சங்க தலைவி ஐஷா கோஷை, திமுக MP கனிமொழி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

கடந்த ஞாயிற்று அன்று மாலை, JNUSU தலைவர் ஐஷா கோஷ் உட்பட 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் JNU வளாகத்திற்குள் வைத்து முகமூடி அணிந்த கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக AIIMS மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். JNU-க்குள் நுழைந்து மாணவர்களையும், பேராசிரியர்களையும் குச்சிகள் மற்றும் கம்பிகளால் தாக்கிய அந்த மர்ம கும்பல் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றது. எனினும் இதுவரை உன்மையான குற்றாவளி யார் என்று உறுதிப்படுத்தப்படவில்லை.

இதனிடையே JNU வன்முறைக்கு காரணம் இடதுசாரி கட்சிகள் தான் எனவும், காங்கிரஸ் தலைவர்களும் இதற்கு காரணம் என்று பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

என்றபோதிலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) நடைப்பெற்ற வன்முறைக்கான பொறுப்பை இந்து ரக்ஷா தளம் ஏற்றுக்கொண்டது. "JNU என்பது தேசிய விரோத நடவடிக்கைகளின் மையமாகும், இதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. JNU-வில் நடந்த தாக்குதலுக்கு நாங்கள் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறோம், அவர்கள் எங்கள் தொழிலாளர்கள் என்று கூற விரும்புகிறோம்" என்று இந்து ரக்ஷத் தளத் தலைவர் பிங்கி சவுத்ரி தெரிவித்துள்ளார்.

பிங்கி சவுத்ரியின் கூற்றுகள் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இதனிடையே JNU வன்முறையில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என நாடு முழுவதிலும் கல்லூரி மாணவர்கள் உள்பட பலரும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் இன்று திமுக மூத்த உறுப்பினர் MP கனிமொழி, JNU மாணவ சங்க தலைவி ஐஷா கோஷை சந்தித்து ஆதரவு அளித்தார். டெல்லியில் ஐஷா தங்கியிருக்கும் வீட்டிற்கு நேரடியாக சென்ற கனிமொழி ஐஷா உடல் நிலை குறித்து விசாரித்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் இதுகுறித்து தெரிவிக்கையில்., "ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் சேர்ந்த பிறகு தீபிகா படுகோனின் திரைப்படத்தை புறக்கணிப்பதற்கான ஒரு பிரச்சாரம் சமூக ஊடகத்தில் தீவிரமாகி வருகிறது. நான் இந்தி திரைப்படங்களை பார்ப்பதில்லை, ஆனால் சமூக ஊடக வாசிகள் அவர்களது செயலால் என்னை போன்றவர்களைச் சென்று தீபிகா போன்றோரது திரைப்படங்களைப் பார்க்கவும், அவருக்கு ஆதரவளிக்கவும் தூண்டுகிறார்கள்" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்றைய தினம் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் JNU மாணவர்களுக்கு ஆதரவாக, JNU வளாகத்தில் உள்ள சபர்மதி விடுதிக்கு சென்று தனது ஆதரவினை தெரிவித்திருந்தார். இதனையடுத்து தீபகா படுகோனுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பிரச்சாரங்கள் நடந்து வருகிறது. மேலும் வரும் ஜனவரி 10-ஆம் தேதி தீபிகா நடிப்பில் வெளியாகவுள்ள "சாப்பக்" திரைப்படத்தினை புறக்கணிக்குமாறும் சமூக ஊடக போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News