முத்தலாக் விவகாரம் அரசியலாக்கப்பட கூடாது- மோடி

Last Updated : Apr 29, 2017, 03:24 PM IST
முத்தலாக் விவகாரம் அரசியலாக்கப்பட கூடாது- மோடி title=

முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இஸ்லாமிய சமூதாயத்தை சேர்ந்த அறிஞர்கள் முன்வருவார்கள் என நம்புவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

முஸ்லிம் மதத்தில் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய முத்தலாக் அமலில் உள்ளது. இது தொடர்பான வழக்கில் ‘முத்தலாக்’ முறை அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனவும், முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பறிக்கிறது எனவும் அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இது தொடர்பான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது, அதில் முத்தலாக் முறைக்கு ஆதரவாக அனைத்து இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியமும், எதிராக மத்திய அரசும் வாதிட்டு வருகின்றன.

சமீபத்தில் உபி மாநிலத்தில் நடந்த சட்டபேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முத்தலாக் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என பாஜக ஏற்கனவே வாக்குறுதி அளித்தது.

தேர்தலை அடுத்து இஸ்லாமியர்கள் பெரும்பானமையாக வாழும் பகுதியில் உள்ள தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது பெரும் அதிர்ச்சியாக எழுந்தது. இஸ்லாமிய பெண்கள் பாஜகவிற்கு அதிகமாக வாக்களித்து உள்ளனர் என கூறப்பட்டது. இத்தேர்தலை அடுத்து முத்தலாக் விவகாரத்தில் பாதிக்கப்படும் பெண்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுகிறார்கள், காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கிறார்கள்.

கன்னட கவிஞர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி பசவேஸ்வர் பிறந்தநாள் விழாவில் பேசிய மோடி:-

முத்தலாக் விவகாரம் அரசியலாக்கப்பட கூடாது என்பதை இஸ்லாமிய சமூதாயம் உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் கூட முத்தலாக் முறைக்கு முடிவு கட்டப்பட்டு உள்ளது. இந்தியாவில் இப்போதும் விவாதப்பொருளாகவே உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் நவீனத்திற்கான பாதையை காட்டவேண்டும் என கூறியுள்ளார். 

“இப்போதைய நாட்களில் முத்தலாக் விவகாரமாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் சிறந்த பாரம்பரியத்தை பார்க்கையில், இந்தியாவில் உள்ள இஸ்லாம் சமூகத்தை சேர்ந்த அதிகாரம் வாய்ந்தவர்கள் காலாவதியான நடைமுறைகளை ஒழிக்கவும், புதிய தற்காலிக நடைமுறையை தொடங்குவும் எழுவார்கள் என்ற நம்பிக்கையுடன் எனது மனம் நிறைகிறது,” என பிரதமர் மோடி கூறிஉள்ளார். பிரதமர் மோடியின் 40 நிமிட பேச்சில் பெண்களுக்கான அதிகாரம், சமத்துவம் மற்றும் நல்ல ஆட்சியும் அடங்கிருந்தது.
 
இந்த பிரச்சனையில் (முத்தலாக்) இருந்து நம்முடைய தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை பாதுகாக்க இஸ்லாமிய சமூதாயத்தை சேர்ந்த மக்கள் முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்து உள்ளார். முத்தலாக் விவகாரத்தை இஸ்லாமிய சமூதாயம் அரசியலாக்க விட கூடாது எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

Trending News