ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் ஊழியர்களுக்கு மிகப்பெரிய நல்ல செய்தி வந்துள்ளது. வரும் வாரங்களில், LIC ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்த முடிவை மத்திய அரசு எடுக்கும் என கூறப்படுகின்றது. LIC ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அளிப்பதற்கான முன்மொழிவுக்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளிக்கப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் ஊதியம் 20 சதவிகிதம் உயர்த்தப்படும் என்றும் கூறப்படுகின்றது.
LIC ஊழியர்களுக்கு கண்டிப்பாக இந்த ஆண்டு ஊதிய உயர்வு அறிவிக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஊழியர்களுக்கு 20 சதவிகித ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும் என LIC நிர்வாகம் நிதி அமைச்சகத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கு அடுத்த வார மத்தியில் மத்திய அரசாங்கத்திடமிருந்து ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கபடுகின்றது.
சமீபத்தில், மத்திய அரசின் (Central Government) பிரதிநிதிகளுடன் LIC தலைவர் ஆன்லைன் பேச்சுவார்த்தையை மேற்கொண்டார். LIC நிர்வாகத்தால் முன்மொழியப்பட்ட ஊதிய உயர்வு குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. கடந்த முறை 17 சதவிகித ஊதிய உயர்வு முன்மொழியப்பட்டது. இது தவிர, வீட்டுக் கடனில் 1 சதவிகித குறைப்பும் முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில், LIC ஊழியர்களுக்கு 18.5 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதத்திற்குள் ஊதிய உயர்வு கிடைக்கக்கூடும் என கூறப்படுகின்றது. 2017, ஆகஸ்ட் 1 முதல் LIC ஊழியர்களின் ஊதியம் அதிகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: பென்ஷன் இல்லையே என டென்ஷன் வேண்டாம்; ₹74,300 பென்ஷன் தரும் அசத்தல் திட்டம்
இந்த நிதி ஆண்டின் பட்ஜெட் தாக்கலின் போது, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், LIC பங்குகளை விற்பது பற்றி அறிவித்தார். கூடிய விரைவில் இந்திய பங்குச்சந்தைகளில் LIC-யின் IPO பட்டியலிடப்படும் என்றும் கூறப்படுகின்றது. இந்த IPO-வில் 10 சதவிகித பங்குகள் LIC பாலிசிதாரர்களுக்காக ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விற்பனையின் மூலம் சுமார் 1 லட்சம் கோடி ரூபாயை ஈட்டுவதை மத்திய அரசு இலக்காகக் கொண்டுள்ளது.
LIC மொத்தம் 32 கோடி பாலிசிகளைக் கொண்டுள்ளது, அதன் சொத்துக்கள் சுமார் 31 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இந்த அடிப்படையில், நிறுவனம் 10% பங்குகளை விற்றால், அதன் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாயை திரட்ட முடியும். இத்தகைய சூழ்நிலையில், அதன் பாலிசிதாரர்களுக்கு ரிசர்வ் ஒதுக்கீட்டில் 10 ஆயிரம் கோடி ரூபாய் பங்கு கிடைக்கும்.
ALSO READ: LIC பாலிசிதாரர்களுக்கு மிகப்பெரிய செய்தி: கொரோனா காலத்தில் உதவிக்கரம் நீட்டியது LIC
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR