2019-ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நாட்டு மக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில், கர்நாடகாவின் கல்புர்கியில் உள்ள ஒரு கிராமம் உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
சூரிய கிரகணத்தின் போது, மனநலம் மற்றும் உடல் ஊனமுற்ற குழந்தைகளை கழுத்தளவு ஆழமாக குழியில் புதைத்தால் அவர்கள் உடல் நலம்பெறும் என்ற மூட நம்பிக்கை பின்பற்றும் கல்புர்கியில் உள்ள பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை குழியில் புதைத்துள்ளனர்.
இன்று நிகழ்ந்த சூரிய கிரகணம், 2019-ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் மற்றும் வருடாந்திர ஒன்றாகும். சந்திரன் சூரியனின் மையத்தை மறைக்கும்போது இந்த வருடாந்திர கிரகணம் நிகழ்கிறது, கிரகணத்தின் போது சூரியனின் வெளிப்புற விளிம்புகள் தெரிந்து ஒரு `நெருப்பு வளையம்' போல் காட்சியளிப்பதால் இந்த கிரகணத்தை பார்க்க அனைவரும் ஆவலாக இருந்தனர். இதனிடையே கர்நாடகாவில் குல்புர்கி பகுதியில் கிராமவாசிகள் மேற்கொண்ட மூட நம்பிக்கை தற்போது பல செய்திதாள்களின் தலைப்பை செய்தியாய் இடம்பெற உள்ளது.
சூரிய கிரகணத்துடன் தொடர்புடைய பல வினோதமான மூடநம்பிக்கைகள் இன்னும் நம்பப்படுகின்றன மற்றும் பல பின்பற்றப்படுகின்றன என்பதற்கு உதாரணம் இந்த செயல்பாடுகள் ஆகும்.
இதேப்போன்று, கிரகணத்தின் போது எந்த உணவையும் சமைக்கக்கூடாது, கிரகணம் முடிவதற்குள் மீதமுள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்ற மூட நம்பிக்கைகளும் இக்கால கட்டத்தில் பின்பற்றப்படுகின்றன. அதேப்ப்போல் கிரகணங்களின் போது கோயில்களின் கதவுகள் கூட பொதுவாக மூடப்படுகிறது.
இதே காலகட்டத்தில் தான் கடவுளின் சிலைகளை வணங்குவதை அல்லது தொடுவதை மற்றொருவர் தடை செய்யும் வழக்கமும் பின்பற்றப்படுகிறது.
ஒவ்வொரு கிரகணத்திற்குப் பிறகும், மக்கள் குளிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள், மேலும் புதிய மற்றும் சுத்தமான ஆடைகளை அணிய கட்டாயப்படுத்தப் படுகின்றனர். அதேப்போல் கிரகண காலத்தில் தூக்கம், சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல், உடலுறவு போன்ற வழக்கமான செயல்களைச் செய்வது கூட தடைசெய்யப்பட்டுள்ளது.
அதேப்போல் கர்ப்பிணி பெண்கள் ஊசி, கத்தி போன்ற கூற்மையான ஆயுதங்களை தொடுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் கிரகணத்தின் போது படுக்கையினை விட்டு இறங்கவும், உடல் பாகங்களை மடக்கி படுக்கவும், அமரவும் மறுக்கப்படுகின்றனர்.