Loksabha Elections 2024: தேர்தல் பிரச்சாரத்தின் தரம் குறைந்து வருவதை நிவர்த்தி செய்யும் ஒரு முயற்சியாக, இந்திய தேர்தல் ஆணையம், அனைத்து கட்சிகளுக்கும் ஒரு முக்கியமான ஆலோசனையை வழங்கியுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது, கட்டுப்பாட்டை கடைபிடித்து, விதிமுறைகளை பின்பற்றி, ஆரோக்கியமான விவாதத்தில் ஈடுபட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம், நடத்தை நெறிமுறைகளை பின்பற்றுமாறு ஆலோசனை வழங்கியுள்ளது. முக்கியமாக, சாதி, மதம் மற்றும் மொழி அடிப்படையில் வாக்கு சேகரிக்கக் கூடாது என்றும், எந்த ஒரு மத வழிபாடு அல்லது மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசவோ, செயல்படக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
விதியை மீறும் நட்சத்திர பேச்சாளர்கள் மீது கடும் நடவடிக்கை
அரசியல் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் முக்கிய வேட்பாளர்கள், நடத்தை விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரச்சாரத்தின் போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. ஆரோக்கியமான அரசியல் விவாதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, தனிமனித தாக்குதல், பிரிவினைவாதம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்
1951ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 77வது பிரிவின் கீழ் "நட்சத்திர பிரச்சாரகர்கள்" என்று நியமிக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் பேரணிகளின் போது சிறப்புரை ஆற்றும் வாய்ப்புகளை பெறுகிறார். இதனால், நெறிமுறைகளை பின்பற்றி தரத்தை உறுதிபடுத்தும் பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. தேர்தல் பிரச்சாரங்களின் போது நடத்தை நெறிமுறையை பின்பற்றி, மாதிரி நடத்தை விதிகள் மற்றும் சட்ட விதிகளுக்கு இணக்கமான வகையில் நடந்து கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
கருத்து சுதந்திரத்தை பொறுப்புடன் அனுபவிக்கவும்: தேர்தல் ஆணையம்
கருத்து சுதந்திரத்தை அனுபவிக்கும் அதே நேரத்தில், அதனை பொறுப்புடன் செயல்படுத்த வேண்டும் என்றும், பொறுப்பற்ற பேச்சும் நடத்தையும் பிரச்சாரத்தின் போது கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. களத்தில் மட்டுமல்லாது, சமூக ஊடக தளங்களிலும், முறையற்ற வகையில் அல்லது தரம் தாழ்ந்த வகையில் பதிவுகள் எதுவும் கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளது.
மக்களவைத் தேர்தல் 2024
மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், இப்போதே தேர்தல்களும் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. கட்சிகள் மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணிகளை அமைக்க, குழுக்கள் அமைத்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் விரைவில், மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியலை, அனைத்து கட்சிகளும் வெளியிட தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | பயணிகளின் கனிவான கவனத்திற்கு! ரயிலில் பயணிப்பவர்கள் எப்போது தூங்கக்கூடாது? தெரியுமா?
கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த, பாஜக குழு அமைத்துள்ளது. இந்தக் குழுவில், மதிய இணை அமைச்சர் இயல் முருகன், பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் நைனார் நாகேந்திரன் மற்றும் வானதி சீனிவாசன் தேசிய செயற்குழு உறுப்பினர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளன. ஏற்கனவே பாரதீய ஜனதா கட்சி கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ