பாஜக வேட்பாளர் கபில் மிஸ்ராவுக்கு 48 மணி நேர பிரச்சார தடை!

டெல்லி தேர்தலை இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான போர் என்று கூறி சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட பாஜக வேட்பாளர் கபில் மிஸ்ராவுக்கு தேர்தல் ஆணையம் சனிக்கிழமை (ஜனவரி 25) 48 மணி நேர பிரச்சார தடை விதித்துள்ளது!

Last Updated : Jan 25, 2020, 04:13 PM IST
பாஜக வேட்பாளர் கபில் மிஸ்ராவுக்கு 48 மணி நேர பிரச்சார தடை! title=

டெல்லி தேர்தலை இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான போர் என்று கூறி சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட பாஜக வேட்பாளர் கபில் மிஸ்ராவுக்கு தேர்தல் ஆணையம் சனிக்கிழமை (ஜனவரி 25) 48 மணி நேர பிரச்சார தடை விதித்துள்ளது!

இந்தத் தடை சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைமுறைக்கு வரும் என்று தலைமை தேர்தல் ஆணையர் கையெழுத்திட்ட தேர்தல் ஆணைய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஜனவரி 24-ஆம் தேதி, கபில் மிஸ்ராவின் பதிவினை நீக்குமாறு தேர்தல் ஆணையம் ட்விட்டரிடம் கேட்டுக் கொண்டுள்ளது. டெல்லி தலைமை நிர்வாக அதிகாரி அலுவலகம் இந்த பிரச்சினையைத் தொடர்ந்து மிஸ்ராவுக்கு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னதாக டெல்ல சட்டமன்ற தேர்தலினை இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் என விமர்சித்த பாஜக-வின் மாடல் டவுன் வேட்பாளர் கபில் மிஸ்ராவுக்கு எதிராக டெல்லி காவல்துறை வெள்ளிக்கிழமை FIR பதிவு செய்துள்ளது. 

பிப்ரவரி 8 அன்று நடைபெறும் டெல்லி சட்டமன்ற தேர்தல் ஆனது இந்தியாவுக்கும்-பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் போன்றது என பாஜக வேட்பாளர் கபில் மிஸ்ரா விமர்சித்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., "பிப்ரவரி 8-ஆம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் டெல்லி வீதிகளில் சண்டையிடும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு ட்வீட்டில், தென் டெல்லியின் ஷாஹீன் பாக் நகரில் நடைபெற்று வரும் குடியுரிமை திருத்த சட்டம் (CAA) எதிர்ப்பு போராட்டம் குறித்து மிஸ்ரா தனது துப்பாக்கிகளைப் பயிற்றுவித்து, பாகிஸ்தான் ஏற்கனவே ஷாஹீன் பாக் நகருக்குள் நுழைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் டெல்லியில் ஏற்கனவே பல சிறிய பாகிஸ்தான்கள் உருவாக்கப்பட்டுள்ளன, ஷாஹீன் பாக், சந்த் பாக் மற்றும் இந்தர்லோக் மக்கள் இந்திய சட்டங்களை பின்பற்றவில்லை என்றும் அவர் கூறினார். பாகிஸ்தான் கலவரக்காரர்கள் டெல்லியின் தெருக்களில் சேவலை ஆளுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது பாஜக வேட்பாளர் கபில் மிஸ்ராவுக்கு தேர்தல் ஆணையம் 48 மணி நேர பிரச்சார தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

--- டெல்லி சட்டமன்ற தேர்தல் ---

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்தின் பதவிக்காலம் பிப்ரவரி 22-ஆம் தேதியுடன் முடிவடைகிறது, அதற்கு முன்னர் ஒரு புதிய சபை அமைக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் தற்போது டெல்லி சட்டமன்றத்திற்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது. டெல்லி சட்டபேரவைக்கான தேர்தல் ஒரு கட்டமாக நடைபெறும். வாக்குப்பதிவு பிப்ரவரி 8-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11-ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணைய அறிவிப்பின் படி ஜனவரி 6, 2020 நிலவரப்படி டெல்லியின் இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்த வாக்காளர்கள் 1,46,92,136-ஆக பதிவு செய்யப்பட்டுள்ளன. 2,689 இடங்களில் அமைக்கப்படும் 13,750 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

முன்னதாக, 2015 டெல்லி சட்டமன்றத் தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மாநில சட்டப்பேரவையில் மொத்தம் 70 இடங்களில் 67 இடங்களை வென்று டெல்லியில் ஆட்சி பிடித்தது. முதலமைச்சர் கெஜ்ரிவாலின் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 2015-ல் பாரிய வெற்றியைப் பதிவு செய்த பின்னர் தற்போது மீண்டும் தேர்தலை எதிர்கொள்கிறது.

டெல்லியின் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கட்சி மற்றும் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகியவை சட்டசபை தேர்தலுக்கான தேதிகளை அறிவிப்பதற்கு முன்பே வீடு வீடாகச் சென்று தங்கள் பிரச்சாரங்களை துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News