ஒரே வேலை, ஒரே ஊதியம் என்ற SC உத்தரவை தொடர்ந்து மத்திய அரசு சுற்றறிக்கை!

ஒரே வேலைக்கு ஒரே ஊதியம் வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மத்திய அரசு நடவடிக்கை!!

Last Updated : Sep 7, 2019, 03:48 PM IST
ஒரே வேலை, ஒரே ஊதியம் என்ற SC உத்தரவை தொடர்ந்து மத்திய அரசு சுற்றறிக்கை! title=

ஒரே வேலைக்கு ஒரே ஊதியம் வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மத்திய அரசு நடவடிக்கை!!

டெல்லி : ஒரே வேலையை செய்யும் நிரந்தர ஊழியர்களுக்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஒரே ஊதியம் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தொடர்ச்சியாக இருக்கும் பணிகளுக்கு தினசரி ஊதிய அடிப்படையில் ஊழியர்களை நியமிக்கக் கூடாது எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஒரே வேலைக்கு ஒரே ஊதியம் வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. 

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்; ஒரே வேலையை செய்யும் நிரந்தர ஊழியர்களுக்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஒரே ஊதியம் வழங்க வேண்டும். தொடர்ச்சியாக இருக்கும் பணிகளுக்கு தினசரி ஊதிய அடிப்படையில் ஊழியர்களை நியமிக்கக் கூடாது. 

ஒரு வேலை நிரந்தர தொழிலாளர்களின் வேலையும், ஒப்பந்த தொழிலாளர்களின் வேலையும் வெவ்வேறாக இருந்தால் மத்திய, மாநில அரசுகள் ஊதியம் தொடர்பாக என்ன விதிமுறைகள் இருக்கிறதோ அதையே கடைபிடிக்கலாம். ஒப்பந்த தொழிலாளர்கள் இனி நிரந்தர தொழிலாளர்களின் பணிக்கு அமர்த்தப்படமாட்டார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது.  மத்திய அரசின் இந்த அறிவிப்பால் ஏற்கெனவே இருக்கும் ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் வேலையை இழக்கும் வாய்ப்பு இருப்பதாக அச்சம் நிலவுகிறது. 

 

Trending News