செத்தாலும் Article 370ஐ எதிர்த்து போராடுவேன்: ஃபாரூக் அப்துல்லா சபதம்

ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் பல கோடி ரூபாய் மோசடி தொடர்பான பணமோசடி விசாரணை தொடர்பாக ED (அமலாக்க இயக்குநரகம்) ஃபரூக் அப்துல்லாவை விசாரித்துள்ள நிலையில் அவர் இந்த சபதத்தை அறிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 19, 2020, 09:48 PM IST
செத்தாலும் Article 370ஐ எதிர்த்து போராடுவேன்: ஃபாரூக் அப்துல்லா சபதம் title=

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் பல கோடி ரூபாய் மோசடி தொடர்பான பணமோசடி விசாரணை தொடர்பாக ED (அமலாக்க இயக்குநரகம்) ஃபரூக் அப்துல்லாவை விசாரித்துள்ள நிலையில் அவர் இந்த சபதத்தை அறிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா இவ்வாறு தெரிவித்தார், "370 வது பிரிவை ஜம்மு, காஷ்மீரில் இருந்து அகற்றுவதற்கான போராட்டத்தை தொடரும் எனது முடிவு என்னை தூக்கிலிட்டாலும் ஒருபோதும் மாறாது".

ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், "ஃபாரூக் அப்துல்லா உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்பதோ, மேடையில் இருக்கிறாரா இல்லையா என்பதோ போராட்டத்திற்கு தடையில்லை. நான் இறந்தாலும் போராட்டம், நீண்ட அரசியல் யுத்தமாகத் தொடரும்" என்று கூறினார். "இன்னமும் நாங்கள் செல்ல வேண்டிய பாதை அதிகம். எங்கள் போராட்டம் 370 வது பிரிவை அகற்ற வேண்டும் என்பது. இந்த என்னுடைய உறுதியானது, என்னை தூக்கிலிட்டாலும் மாறாது" என்று ஃபரூக் அப்துல்லா கூறுகிறார்.

"இந்த விசாரணை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது, இது ஒன்றும் புதிதல்ல. இது பற்றி நான் எதுவும் சொல்லப்போவதில்லை. என்ன செய்ய வேண்டும் என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும். நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை" என்று அவர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த பிரதான அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய புதிதாக அமைந்துள்ள மக்கள் கூட்டணியைச் சேந்த தலைவர்கள், ஃபரூக் அப்துல்லாவை ED விசாரிப்பது மத்திய அரசின் "witch hunt என்றும் "அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை" என்றும் கூறுகிறது.  

JKCA கிரிக்கெட் சங்கத்தில் இருந்து 40 கோடி ரூபாய்க்கு மேல் நிதி மோசடி செய்த வழக்கில் 82 வயதான தேசிய மாநாட்டுத் தலைவர் ஃபரூக் அப்துல்லா,  ராஜ் பாக் பகுதியில் அமைந்துள்ள அமலாக்கத்துறையின் பிராந்திய அலுவலகத்தில் விசாரிக்கப்பட்டார். அக்டோபர் 15 ம் தேதி People's Alliance என்ற  மக்கள் கூட்டணி அமைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அடுத்த நாள் அமலாக்க நிறுவனம் அவரை விசாரிப்பதற்கான சம்மனை அனுப்பியது.  

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News