டெல்லி பிரதமர் மோடியின் அலுவலகத்தில் திடீர் தீவிபத்து!

Updated: Oct 17, 2017, 09:14 AM IST
டெல்லி பிரதமர் மோடியின் அலுவலகத்தில் திடீர் தீவிபத்து!

டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அலுவலக வளாகத்தில் உள்ள அறையில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டு விட்டதால் பெரிய அளவில் சேதம் இல்லை என்று தகவல் தெரிவிக்கின்றன. 

டெல்லியில் சவுத் பிளாக்கில் பிரதமரின் அலுவலகம் உள்ளது. இங்குள்ள அறை ஒன்றில் இன்று அதிகாலை 3:30 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக சுமார்10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. 

20 நிமிடத்தில் தீ அணைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ முழுமையாக அணைக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தற்போது வரை தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை. பிரதமர் அலுவலகத்தின் 2வது மாடியில் உள்ள 242ம் எண் அறையில்தான் தீவிபத்து ஏற்பட்டது.