Cabinet Meeting: புதிய அமைச்சர்களுடன் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடக்கும்

புதிதாக விரிவாக்கப்பட்டுள்ள அமைச்சரவையின் கூட்டமும் அமைச்சர்கள் குழுவின் தனி கூட்டமும் இன்று கூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 8, 2021, 10:27 AM IST
  • பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவை நேற்று விரிவாக்கப்பட்டது.
  • குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் புதன்கிழமை 43 அமைச்சர்களுக்கு சத்தியப்பிரமாணம் செய்து வைத்தார்.
  • 15 தலைவர்கள் அமைச்சரவைக்கும் 28 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.
Cabinet Meeting: புதிய அமைச்சர்களுடன் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடக்கும் title=

புதுடெல்லி:  பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவை நேற்று விரிவாக்கப்பட்டது. பல துறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இனி முழு முனைப்புடன் அமைச்சரவையின் புதிய அமைச்சர்கள் தங்கள் பணிகளை தொடங்குவார்கள். 

புதிதாக விரிவாக்கப்பட்டுள்ள அமைச்சரவையின் கூட்டமும் அமைச்சர்கள் குழுவின் தனி கூட்டமும் இன்று கூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதன்கிழமை 36 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். மத்திய இணை அமைச்சர்களாக இருந்த 7 அமைச்சர்கள் பதவி உயர்வு பெற்றனர்.

மாலை 5 மணிக்கு அமைச்சரவைக் கூட்டமும், இரவு 7 மணிக்கு அமைச்சர்கள் பேரவையும் நடைபெறும்

அமைச்சரவையின் விரிவாக்கத்துக்கு (Cabinet Expansion) பின்னர், மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடத்தப்படக்கூடும் என கூறப்படுகிறது. இது தவிர, பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சர்கள் கூட்டமும் இரவு 7 மணிக்கு நடக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ: மத்திய அமைச்சராகும் எல்.முருகன்; அடுத்த பாஜக தலைவர் யார்..!!!

43 அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் சத்தியப்பிரமாணம் செய்து வைத்தார்

குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் (Ramnath Kovind) புதன்கிழமை குடியரசுத் தலைவர் மாளிகையில், 43 அமைச்சர்களுக்கு சத்தியப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

ALSO READ: மத்திய அமைச்சரவை விரிவாக்கம்: பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு

இதில் தற்போது அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ள 36 புதிய அமைச்சர்களும், தற்போது மத்திய இணை அமைச்சராக இருந்து மத்திய அமைச்சர்களாக பதவி உயர்வு பெற்றுள்ள 7 பேரும் அடங்குவர். 15 தலைவர்கள் அமைச்சரவைக்கும் 28 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.

பிரதமர் மோடி புதிய அமைச்சர்களுக்கு துறைகளை வழங்கினார்

அமைச்சரவை விரிவாக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல அமைச்சர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பலரது இலாகாக்களும் மாற்றப்பட்டுள்ளன. மன்சுக் மாண்டவியாவுக்கு சுகாதார அமைச்சகம் மற்றும் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. கிரேன் ரிஜிஜுக்கு சட்ட அமைச்சகத்தின் பொறுப்பும், தர்மேந்திர பிரதானுக்கு கல்வி அமைச்சகத்தின் பொறுப்பும், ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சக பொறுப்பும் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை (L Murugan) மீன், கால்நடைத்துறை, தகவல் ஒலிபரப்புத் துறைகளின் இணை அமைச்சராக நியமனம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

ALSO READ: தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையின் இணை அமைச்சராக எல். முருகன் நியமனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News