புது டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் விரிவாக்கம் இன்று மாலை நடக்கவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் பல பெயர்கள் ஊகிக்கப்பட்ட நிலையில், இறுதியாக மத்திய அமைச்சரவையில் இடம் பெறவுள்ள 43 அமைச்சர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இன்று அமைச்சரவை விரிவாக்கத்திற்கு முன்னதாக, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவர், குழந்தைகள் மற்றும் பெண்கள் அமைச்சர் தபாஸ்ரீ சவுத்ரி, ரசாயனத்துறை அமைச்சர் சதானந்த கவுடா, இணை அமைச்சர்கள் சஞ்சய் தாத்ரே, ராவ் சாகேப் ஆகிய அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். பல மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்த நிலையில், காலை முதல் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், இந்த பட்டியல் பல மாநில தலைவர்களுக்கு அதிர்ச்சியையும், பலருக்கு மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரை, தமிழக பாஜக தலைவர் எல். முருகனுக்கு அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளார். இது தமிழக பாஜக-வுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இன்று பிரதமர் இல்லத்தில் நடந்த கூட்டத்தில் எல். முருகன் (L Murugan) கலந்துகொண்டதைத் தொடர்ந்து, அவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கக்கூடும் என்று உறுதியாக நம்பப்பட்டது. தற்போது வந்துள்ள பட்டியலில் அவரது பெயரும் இடம் பெற்றுள்ளது.
ALSO READ: மத்திய அமைச்சரவை விரிவாக்கம், அமைச்சர்கள் தொடர்ந்து ராஜினாமா
இன்று காலை பிரதமர் (PM Modi) இல்லத்தில் புதிய அமைச்சர்களுடனான ஒரு முக்கிய கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
43 leaders to take oath today in the Union Cabinet expansion. Jyotiraditya Scindia, Pashupati Kumar Paras, Bhupender Yadav, Anupriya Patel, Shobha Karandlaje, Meenakshi Lekhi, Ajay Bhatt, Anurag Thakur to also take the oath. pic.twitter.com/pprtmDu4ko
— ANI (@ANI) July 7, 2021
தமிழகத்தில் பாஜக கால் பதிக்க பல முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கும் வேளையில், தமிழக பாஜக தலைவருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது ஒரு பெரிய முடிவாக பார்க்கப்படுகின்றது.
கடந்த ஒரு வாரமாகவே, யார் யாருக்கு அமைச்சரவையில் (Modi Cabinet)இடம் கிடைக்கக்கூடும் என்ற ஊகங்கள் பரவி வந்த நிலையில், இன்று இறுதியாக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த சில நாட்களாக அரசாங்கத்தின் பல கட்ட பேச்சுவார்த்தைகளும், சந்திப்புகளும் நடந்து வருகின்றன.
மத்திய அமைச்சரவையில், 6 மருத்துவர்கள், 5 பொறியாளர்கள், 13 வழக்கறிஞர்கள், 7 முன்னாள் அரசு அதிகாரிகளுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: Cabinet Reshuffle: மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ராஜினாமா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR