நிதிப்பற்றாக்குறையால் நிறுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க கடன் உதவி வழங்குவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்..!
நிதிப் பற்றாக்குறையால் நிறுத்திவைக்கப்பட்ட வீடுகளை கட்டி முடிக்கும் வகையில் குறைந்த வட்டிக்கு ரியல் எஸ்டேட் துறைக்கு கடன் வழங்குவதற்காக, 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வாராந்திர மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை (நேற்று) மாலை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில்; மலிவு மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட வீட்டுத் துறையில் நிறுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களை நிறைவு செய்வதற்கு முன்னுரிமை கடன் நிதியுதவி வழங்க அரசாங்கம் ஒரு "சிறப்பு சாளரத்தை" நிறுவும். ரியல் எஸ்டேட் துறையினருக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க, சிறப்பு சாளரம் அமைக்கப்பட்டு அதன் மூலம் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்தார். இதன் மூலம் நிதிப்பற்றாக்குறையால் கட்டி முடிக்கப்படாத கட்டடங்களை கட்டி முடிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.இதன் மூலம் 1600 கட்டுமானத் திட்டங்கள் புத்துயிர் பெறும் என்றும் சுமார் நான்கரை லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்த AIF இல் இறையாண்மை மற்றும் ஓய்வூதிய நிதிகள் பங்கேற்க எதிர்பார்க்கப்படுவதால் நிதி அளவு அதிகரிக்கும். செயல்படாத சொத்துகளாக அறிவிக்கப்பட்ட அல்லது நொடித்துச் செல்லும் நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் திட்டங்களால் கூட AIF ஐப் பயன்படுத்தலாம். நேர்மறை நெட்வொர்க்குடன் கூடிய RERA- பதிவு செய்யப்பட்ட திட்டங்களுக்கு மட்டுமே நிதி வழங்கப்படும். AIF நிதி எஸ்க்ரோ கணக்கு மூலம் நிலைகளில் வெளியிடப்படும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்டம் முடிந்ததும் தொடர்ந்து இருக்கும்.
மும்பையில் 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட வீடுகளை கட்டி முடிக்கவும் சென்னை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் ஒன்றரை கோடிக்கு உட்பட்ட வீடுகளை கட்டி முடிக்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் அவர் விளக்கம் அளித்தார். இதர மெட்ரோ நகரங்களில் ஒருகோடிக்கு உட்பட்ட வீடுகள் கட்டி முடிக்க நிதியுதவி அளிக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.