டெல்லியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஆர்.கே.தவான் காலமானார்

மூத்த காங்கிரஸ் தலைவர் ரஜீந்தர் குமார் தவான் இன்று இரவு டெல்லியில் காலமானார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 6, 2018, 09:30 PM IST
டெல்லியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஆர்.கே.தவான் காலமானார் title=

டெல்லியில் உள்ள பி.எல். கபுர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய மந்திரி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் ரஜீந்தர் குமார் தவான், இன்று இரவு 7 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 81 ஆகும். இவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நெருங்கிய உதவியாளராக இருந்தவர். வயது முதிர்வு காரணமாக கடந்த வாரம் செவ்வாய்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இன்று அவரது மறைவுக்கு காங்கிரசு கட்சி சார்பாக இரங்கல் தெரிவிக்கப்பட்டது. காங்கிரசு கட்சியின் மதிப்புமிக்க உறுப்பினரான ஆர்.கே. தவான் மறைவுக்கு நாங்கள் கவலைப்படுகிறோம். அவரது குடும்பத்திற்கு எங்கள் பிரார்த்தனை இருக்கும் என்று காங்கிரஸ் கட்சி ட்வீட் செய்துள்ளது.

 

ரஜீந்தர் குமார் தவான் 1962 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள் அவருக்கு தனிப்பட்ட உதவியாளராக மிகவும் நெருக்கமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending News