பிறந்தநாள் அன்றே காலமானார் முன்னால் முதல்வர் என்.டி. திவாரி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னால் முதல்வருமான என்.டி. திவாரி உடல் நலக்குறைவால் இன்று டெல்லியில் காலமானார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 18, 2018, 05:31 PM IST
பிறந்தநாள் அன்றே காலமானார் முன்னால் முதல்வர் என்.டி. திவாரி title=

நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் அவதி பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் மாநிலத்தின் முன்னால் முதல்வருமான என்.டி. திவாரி இன்று டெல்லி மேக்ஸ் மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 93 ஆகும். இவர் அக்டோபர் 18, 1925 ஆம் ஆண்டு பிறந்தார். இன்று அவருக்கு பிறந்தநாள், தனது பிறந்த நாளான இன்று அவர் காலமானார். எல்லா கட்சியினரும் மதிக்கும் தலைவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட்டிலும் முதல்வராக பதவி வகித்துள்ளார். 1976-77, 1984-85,1988-89 வரை உத்தரப்பிரதேச மாநிலத்திலும், 2002-2007 வரை உத்தராகண்ட் மாநிலத்திலும் முதல்வராக பணியாற்றி உள்ளார். அதேபோல 2007-2009 வரை ஆந்திரா மாநிலத்தில் கவர்னாக பணியாற்றி உள்ளார்.

 

இவரது மறைவுக்கு பல அரசியல் தலைவர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

Trending News