நெய் ரகசியம் தெரியுமா? ஒரே வாரத்தில் கவர்ச்சி கண்ணு, பளபளக்கும் தோல்

Ghee | பளபளப்பான சருமம் வேண்டும் என்றால் நெய்யை எப்படி பயன்படுத்துவது என்ற ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள். 

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 24, 2024, 06:59 PM IST
  • தோல் பராமரிப்பில் நெய்
  • தினமும் பூசினால் பளபளப்பாகும்
  • நெய் பயன்படுத்துவது எப்படி?
 நெய் ரகசியம் தெரியுமா?  ஒரே வாரத்தில் கவர்ச்சி கண்ணு, பளபளக்கும் தோல் title=

Ghee Skin Care Benefits Tamil | நெய் ரகசியம் ஏராளம் உள்ளது. சாப்பாடு சுவையை கூட்டுவது மட்டுமல்ல தோல் கண்ணாடி போல் மினுமினுக்கவும் வைக்கும். இதில் இதய ஆரோக்கியத்துக்கு தேவையான நல்ல கொழுப்புகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கூறுகளும் உள்ளன. மேலும், உடல் எடையை குறைக்க உதவும் ஊட்டச்சத்துகளும் இதில் நிறைந்துள்ளன. அதேநேரத்தில் தோல் பராமரிப்பிலும் நெய் ஒரு முக்கிய பங்கை வகித்து வருகிறது, இது சருமத்தின் நிலையை கணிசமாக மேம்படுத்துவதோடு பளபளப்பான முகத்தைப் பெறவும் உதவுகிறது.

நெய்யின் இருக்கும் சத்துகள்

நெய் வைட்டமின் ஏ, ஈ மற்றும் கே ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாகவும் உள்ளது. நெய்யில் வைட்டமின்கள், ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது. 

நெய்யின் நன்மைகள்

உணவு சரியான நேரத்திற்கு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன. மேலும் வாயுக்கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்த்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகி விடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும். இவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது.

வயதானவர்கள் உணவில் நெய்யை அளவாக சேர்த்து வந்தால், தசைகள் மற்றும் மூட்டுகளில் தேய்மானம் எதுவும் ஏற்படாமல், அவைகள் நன்கு செயல்படுவதற்கு உதவும். இதனால் வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டு சம்பந்தமான பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். நிறைய மக்களுக்கு பால் பொருட்கள் என்றால் அலர்ஜி ஏற்படும். அத்தகையவர்கள் நெய்யை பயமின்றி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

பசுநெய்யை ஹோமத்தில் விடும் போது, அதனால், காற்றில் உள்ள மாசு குறைகிறது. நெய் கலந்த அரிசியை ஹோமத்தில் போடுவதால், அதில் இருந்து அசிட்டிலின், எத்திலீன் ஆக்ஸைடு உள்ளிட்ட வாயுக்கள் உருவாகின்றன. இவை மனிதனுக்கு ஏற்படும் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, குடல் தொடர்பான நோய்கள் என பல நோய்களை தீர்க்கும் சக்தி பெற்றுள்ளவையாக இருக்கின்றன.

மேலும் படிக்க | தொப்பை கொழுப்புக்கு உடனடி தீர்வளிக்கும் சமையலறை மசாலாக்கள்: ட்ரை பண்ணி பாருங்க

தோல் பளபளப்பாக இருக்க நெய் பயன்படுத்தும் முறைகள் : 

1. குளிப்பதற்கு முன்பும் பின்பும் சிறிதளவு நெய்யைத் தடவினால் சருமத்தில் ஈரப்பதம் நிலைத்து நிற்கும். இதனால், சீக்கிரம் தோல் வறட்சி ஆவது நீங்கும். நெய் சருமத்தில் எளிதில் உறிஞ்சப்படும் என்பதால் ஒட்டும் தன்மை இருக்காது. வறண்ட பகுதிகளில் தினமும் நெய்யை தடவுவது உங்கள் சரும திசுக்களுக்கு ஆழமான ஹைட்ரேஷன் கொடுக்கும். தேவையான ஊட்டச்சத்தையும் கொடுக்கும்.

2. தினசரி உணவில் நெய்யைச் சேர்ப்பது சருமத்தின் நிறத்தை மேம்படுத்துவதோடு, அதன் பளபளப்பையும் அதிகரிக்கும். நெய்யில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் கூறுகளும் நம் உடலை நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. கண்களை சுற்றியிருக்கும் கரு வளையங்களை போக்க நெய் உதவும். கருவளையம் இருக்கும் பகுதியில் இரவில் தடவி மசாஜ் செய்தால் கருவளையம் நீங்கும். 

3. நெய்யில் இருக்கும் வைட்டமின் ஏ, டி மற்றும் ஈ ஆகியவை இருப்பதுடன், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் உள்ளன. இது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்க உதவுகிறது. இதனை தொடர்ந்து பயன்படுத்துவதால் தோல் சுருக்கங்கள் குறைந்து இளமையாக இருப்பீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | செரிமானம் முதல் நினைவாற்றல் வரை: இலவங்கப்பட்டை நீர் அளிக்கும் ஆரோக்கிய நன்மைகளின் லிஸ்ட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News