இந்தோனேசிய தலைநகர் பாலியில் இன்று (நவம்பர் 15, 2022) வருடாந்திர ஜி 20 உச்சி மாநாடு தொடங்கியது, உலகத் தலைவர்கள் அடுத்த இரண்டு நாட்களில் ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் கோவிட் -19 தொற்றுநோயால் உண்டாகியுள்ள சவால்கள் குறித்து விவாதிக்க உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி ஜி-20 மாநாட்டின் முதல் அமர்வில் "உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார். மேலும் உக்ரைனில் போர்நிறுத்தம் மற்றும் இராஜதந்திர பாதைக்கு திரும்புவதற்கான வழியை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறினார். கோவிட் தொற்றுக்கு பிந்தைய காலத்தில் பல விதமான சவால்கள் எழுந்துள்ள நிலையில், அதற்கு ஏற்ற வகையில் புதிய உத்திகளை ஒருவாக்கும் பொறுப்பு நமது தோள்களில் உள்ளது என்றும் அவர் உலகளாவிய தலைவர்களிடம் கூறினார். உலகில் பாதுகாப்பு, அமைதி, நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதே "இன்றைய தேவை" என்றும் உலக தலைவர்களிடம் பிரதமர் மோடி கூறினார்.
ஜி20 மாநாட்டில் பதவியேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்தார். இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெறும் முதல் நேருக்கு நேர் சந்திப்பு இதுவாகும். முன்னதாக, அக்டோபரில், ரிஷி சுனக் பிரதமராக பதவி ஏற்ற பிறகு, பிரதமர் மோடி மற்றும் சுனக் ஆகியோர் தொலைபேசியில் பேசி, இரு நாடுகளுக்கும் இடையேயான "சமநிலை மற்றும் விரிவான" கட்டுபாடற்ற வர்த்தக ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிப்பதற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். முன்னதாக திங்கள்கிழமை பாலிக்கு வந்த பிரதமர் மோடி, செனகல் குடியரசுத் தலைவர் மேக்கி சால், நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
மேலும் படிக்க | காட்டாய மதமாற்றம் ஒரு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்: உச்சநீதிமன்றம்
கடந்த ஆண்டு இந்தோனேஷியா பொறுப்பேற்ற போது "ஒன்றாக மீள்வோம், வலிமையாக மீள்வோம்" என்பது உலகத் தலைவர்களின் மாநாட்டு கருப்பொருளாக இருந்தது. இந்த மாநாட்டில், உணவு மற்றும் ஆற்றல் பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றங்கள் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றில் மூன்று அமர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டையொட்டி, பிரதமர் மோடி, இந்தோனேசிய அதிபர் விடோடோ, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் ஆகியோருடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்த உள்ளார்.
முன்னதாக திங்களன்று, உச்சிமாநாட்டிற்கு ஒரு நாள் முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மற்றும் அவரது சீன ஜனாதிபதி ஜி பாலியில் மூன்றரை மணி நேரம் சந்தித்து அமெரிக்க-சீனா உறவுகள் குறித்து விவாதித்தனர்.
பாலி உச்சிமாநாட்டில் பங்கேற்பதில் இருந்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் விலகிய நிலையில், அந்நாட்டின் பிரதிநிதியாக தனது வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவை அனுப்பியுள்ளார்.
அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, ஆகிய 19 நாடுகளை உள்ளடக்கிய ஜி20 அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU).
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ