Kargil Diwali: தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக ராணுவத்தினருடன் தீபாவளி கொண்டாடும் பிரதமர் மோடி

PM Diwali Celebrations: 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தீபாவளியை கொண்டாட மோடி பல்வேறு ராணுவ தளங்களுக்கு சென்று வருகிறார். இது ராணுவ வீரர்களுடன் பிரதமர் கொண்டாடும் ஒன்பாதவது  தீபாவளி 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 24, 2022, 03:46 PM IST
  • ராணுவ வீரர்களுடன் பிரதமர் கொண்டாடும் ஒன்பாதவது தீபாவளி
  • 2014ஆம் ஆண்டு முதல் ராணுவ தளங்களில் தீபாவளி கொண்டாடும் பிரதமர்
  • பிரதமர் நரேந்திர மோடியின் ஒன்பதாவது தீபாவளி
Kargil Diwali: தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக ராணுவத்தினருடன் தீபாவளி கொண்டாடும் பிரதமர் மோடி title=

Diwali 2022: பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 9வது ஆண்டாக ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார். பிரதமர் மோடி கார்கில் வந்து ராணுவ வீரர்களுடன் கொண்டாடியதாக பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. "பிரதமர் நரேந்திர மோடி கார்கில் வந்தடைந்தார், அங்கு அவர் நமது துணிச்சலான வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார்" என்று PMO தெரிவித்துள்ளது. 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தீபாவளியை கொண்டாட மோடி பல்வேறு ராணுவ தளங்களுக்கு சென்று வருகிறார். முன்னதாக, பிரதமர் மோடி ட்விட்டரில் தீபாவளி வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டு, "அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். தீபாவளி வெளிச்சம் மற்றும் பிரகாசத்துடன் தொடர்புடையது. இந்த புனிதமான பண்டிகை, நம் வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தட்டும். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் அற்புதமான தீபாவளியைக் கொண்டாடுங்கள்" என்று வாழ்த்து தெரிவித்திருந்தார்.

கார்கில் சென்ற பிரதமர் மோடி, இந்திய ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார். அப்போது, ​​இளம் ராணுவ அதிகாரி ஒருவர் பிரதமர் மோடிக்கு சிறப்பு பரிசு வழங்கினார். பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது, ​​மேஜர் அமித் ஒரு புகைப்படத்தை வழங்கினார்.

மேலும் படிக்க | 173 பேர் இருந்த விமானம் விபத்துக்குள்ளானது! பிலிப்பைன்ஸ் விமான நிலைய விபத்து

2001 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு மேஜர் அமித் வழங்கிய படம் 2001 ஆம் ஆண்டு அவர் குஜராத் முதல்வராக இருந்தபோது எடுக்கப்பட்டது. குஜராத் மாநிலம் பலாச்சடியில் உள்ள சைனிக் பள்ளிக்கு மோடி சென்று அமித் படித்தபோது எடுக்கப்பட்ட படம் இது. படத்தில், அமித் மற்றும் மற்றொரு மாணவன் நரேந்திர மோடியிடம் இருந்து கேடயம் பெறுவதைக்காணலாம்.

மீண்டும் சந்தித்தது மிகவும் உணர்ச்சிகரமான தருணம்

குஜராத்தின் பாலச்சடியில் உள்ள சைனிக் பள்ளியில் மோடியை மேஜர் அமித் சந்தித்தார் என்றும், குஜராத் முதல்வராக பதவியேற்ற பிறகு, அக்டோபரில் அந்த பள்ளிக்கு மோடி சென்றிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரி ஒருவர் கூறும்போது, ​​“இன்று (அக்டோபர் 24) இருவரும் கார்கிலில் மீண்டும் ஒருவரையொருவர் சந்தித்தபோது, ​​அது மிகவும் உணர்ச்சிகரமான சந்திப்பாக இருந்தது.

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்து, எல்லையில் பணிபுரியும் வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடி வருகிரார். இந்த முறை தொடர்ந்து 9வது முறையாக ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார்.  2014 அக்டோபர் 23 அன்று சியாச்சின், 11 நவம்பர் 2015 அன்று பஞ்சாப், 20 அக்டோபர் 2016 இல் ஹிமாச்சலில் உள்ள கின்னார், 18 அக்டோபர் 2017 அன்று ஜம்மு காஷ்மீரில் குரேஸ், 2018 நவம்பர் 7 அன்று உத்தரகாண்டில் உள்ள ஹர்ஷில், 27 அக்டோபர் 2019 அன்று பிரதமர் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார்.

ரஜோரியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலும், 14 நவம்பர் 2020 அன்று ஜெய்சால்மரில் உள்ள லோங்கேவாலா போஸ்டிலும், 4 நவம்பர் 2021 அன்று ரஜோரியின் நவ்ஷேரா செக்டரிலும் பிரதமர் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார்.

முன்னதாக, தீபாவளியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 23) அயோத்தி சென்றார். அயோத்தியில் சரயு நதிக் கரையில், நதிக்கு ஆரத்தி செய்து விளக்குகளை ஏற்றினார். பகவான் ராமர் தனது வார்த்தைகள், எண்ணங்கள், நிர்வாகம் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றில் விதைத்த விழுமியங்களே `சப்கா சாத், சப்கா விகாஸ்`க்கான உத்வேகமாகவும், `சப்கா விஸ்வாஸ், சப்கா பிரயாஸ்' ஆகியவற்றின் அடிப்படையாகவும் உள்ளன என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க | தீபாவளிக்கு நாயை வணங்கும் நாடு! மகாபாரதத்தை போற்றும் நேபாள நாட்டின் நாய் தீபாவளி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News