இன்று முதல் ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக் தடை; மீறினால் கடும் அபராதம்

காந்தி ஜெயந்தி கொண்டாடும் இந்த தருணத்தில், நாடு முழுவதும் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 2, 2019, 11:31 AM IST
இன்று முதல் ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக் தடை; மீறினால் கடும் அபராதம் title=

புதுடெல்லி: சுற்றுச்சூழலைக் காப்பாற்ற, ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் இன்று முதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மெல்லிய படலம் கொண்டபிளாஸ்டிக், பிளாஸ்டிக் தேநீர் கோப்பைகள், தண்ணீர் மற்றும் குளிர் பானங்கள் பாட்டில்கள் போன்ற ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு உள்ளது. அதையும் மீறி நீங்கள் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தினால், அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சி செய்ய முடியாது.

2022-க்குள் இந்தியாவில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பன்படுத்துவதை விடுவிக்கும் இலக்கை பிரதமர் மோடி நிர்ணயித்துள்ளார். கடந்த சுதந்திரத் தினத்தன்று செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிய பிரதமர் தனது உரையில், ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பயன்படுத்துவதை நிறுத்துமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதை முற்றிலுமாக தடை செய்ய காந்தி ஜெயந்தி தினத்தை தேர்வு செய்தார். இப்போது, நாடு முழுவதும் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் மீது தடை விதிக்கப்பட்டது.

இன்று உலகம் முழுவதும் சுற்றுச்சூழலின் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகள் சுற்றுச்சூழலை மிகவும் மாசுபடுத்தியுள்ளன. பிளாஸ்டிக் மக்களின் வாழ்க்கைக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். பல ஆண்டுகளுக்கு முன்பு, இது மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்காக கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதுவே நமக்கு மிகப்பெரிய தீங்காக மாறியுள்ளது. பிளாஸ்டிக் பயன்படுத்துவது நல்லதா? அல்லது மோசமானதா? என்ற ஒரு விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டிற்கும் பிளாஸ்டிக் தீங்கு விளைவிக்கும். இது பயன்படுத்துவதன் மூலம் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. உண்மையில், பிளாஸ்டிக் பெட்ரோலியத்திலிருந்து பெறப்பட்ட ரசாயனங்களால் ஆனது மற்றும் அதிலிருந்து வெளிவரும் நச்சு வாயு ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். பிளாஸ்டிக் தண்ணீரை மாசுபடுத்துகிறது. உற்பத்தியின் போது கழிவு பொருட்கள் வெளியேறி நீர் மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. 

அதேபோல தமிழகம் முழுவதும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கான தடை 2019 ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. பிளாஸ்டிக் தடையை மீறுபவர்களுக்காக அபராதம் மற்றும் தண்டனை விவரங்கள் அடங்கிய மசோதாவை உள்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News