Atiq Ahmad Shot Video: பிரபல ரவுடி அத்திக் அகமது மர்ம நபரால் சுட்டுக்கொலை... உ.பி.,யில் பரபரப்பு

Atiq Ahmed Shot Video​: உத்தர பிரதேசத்தில் பிரபல ரவுடியாக அறியப்படும் அத்திக் அகமது மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது கும்பல் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் சுட்டுக்கொல்லப்பட்டபோது பதிவான வீடியோக்கள் வெளியாகியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Apr 16, 2023, 12:10 AM IST
  • அத்திக் அகமது கும்பலின் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் உள்ளன.
  • இவர் சமாஜ்வாதி கட்சி எம்.பி.யாக பதவி வகித்துள்ளார்.
  • கொலை சம்பவத்தில் இதுவரை இருவர் கைது.
Atiq Ahmad Shot Video: பிரபல ரவுடி அத்திக் அகமது மர்ம நபரால் சுட்டுக்கொலை... உ.பி.,யில் பரபரப்பு title=

Atiq Ahmed Shot Video​: உத்திர பிரதேசம் மாநிலத்தில் குறைந்தது 100 கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்ட கும்பலின் தலைவர்களான அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோர் இன்று (ஏப். 15) உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டனர்.

உத்தர பிரதேசத்தின் ஜான்சியில் நேற்று முன்தினம் (ஏப். 13) நடந்த என்கவுன்டரில் அதிக் அகமதுவின் மகன் ஆசாத் கொல்லப்பட்டார். கொலை செய்யப்பட்ட கும்பலின் வழக்கறிஞர் விஜய் மிஸ்ரா கூறுகையில்,"மக்கள் கூட்டத்தில் இருந்து யாரோ ஒருவர் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் மீது மிக அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டார்" என்றார். அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது விஜய் மிஸ்ரா அவர்களுடன் நின்று கொண்டிருந்தார்.

சுட்டுக்கொல்லப்பட்டபோது பதிவான நேரடி காட்சிகள்:

மேலும் படிக்க | டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன்! கைது செய்ய சதித்திட்டம் -ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

இந்த கொலை சம்பவத்தை அடுத்து, இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கொலைகள் குறித்து போலீசார் தரப்பில் இன்னும் அறிக்கை வெளியிடவில்லை என்றும் வழக்கறிஞர் கூறினார். சம்பவத்தின் காட்சிகளில், அத்திக் அகமதுவும் அவரது சகோதரரும் நிருபர்களிடம் பேசிக் கொண்டே, நடந்து செல்வது தெரிகிறது. அடுத்த நொடியில், அத்திக், அஷ்ரஃப் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி எம்.பி.,யாக இருந்த அத்திக் அகமது, கடத்தல் வழக்கில் தண்டனை பெற்றவர். 2005ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜு பால் கொலை மற்றும் இந்த ஆண்டு பிப்ரவரியில் கொலை செய்யப்பட்ட எம்எல்ஏவின் வழக்கறிஞர் உமேஷ் பால் கொல்லப்பட்ட வழக்கில் அவர் ஒரு குற்றவாளியாவார். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | உலகிலேயே உயர்ந்த மனிதர் டாக்டர் அம்பேத்கர்! 125 அடி உயர அம்பேத்கர் சிலை ஹைதராபாதில்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News