டெல்லியில் கல்லூரிக்குள் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்! நிர்வாகம் அலட்சியம்!

டெல்லியில் கார்கி கல்லூரி ஆண்டு விழாவின் போது வெளி ஆட்களால், மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக கல்லூரி மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Last Updated : Feb 10, 2020, 01:00 PM IST
டெல்லியில் கல்லூரிக்குள் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்! நிர்வாகம் அலட்சியம்! title=

டெல்லியில் கார்கி கல்லூரி ஆண்டு விழாவின் போது வெளி ஆட்களால், மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக கல்லூரி மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

டெல்லியில் கார்கி கல்லூரி என்ற மகளிர் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. 50 ஆண்டுகளைக் கடந்து செயல்பட்டு வரும் இந்தக் கல்லூரியின் ஆண்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த கலாச்சார நிகழ்வின் போது கல்லூரிக்குள் மது போதையில் நுழைந்த சிலர் மாணவிகள் பலரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி உள்ளனர். 

இந்த சம்பவத்தின் போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படையினரும், போலீசாரும் ஏதும் செய்யாமல் அமைதியாக இருந்ததாகவும் மாணவிகள் குற்றம்சாட்டி உள்ளனர். இது தொடர்பான தகவலை அக்கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்., ரெவெரி என்று அழைக்கப்படும் மூன்று நாள் நீடித்த விழாவின் கடைசி நாளான வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் சில ஆண்கள், அடையாள அட்டை இல்லாமல் வளாகத்திற்குள் நுழையத் தொடங்கினர். அதில் போதையில் இருந்த நடுத்தர வயது ஆண் ஒருவர் எங்களை பாலியல் ரீதியாகக் கட்டாயப்படுத்தினார். மேலும் பல விதமான பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டனர் என்றும் கூறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக மாணவி ஒருவர் கூறுகையில், அவர்கள் கல்லூரி மாணவர்கள் அல்ல. 30 முதல் 35 வயது மதிக்கதக்கவர்களாக இருந்தார்கள். அவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் புகைப்பிடித்த படங்களும் எங்களிடம் உள்ளன. பல மாணவிகள் அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடினர். மருத்துவ உதவி தேவைப்பட்ட போதிலும் கல்லூரி நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை. 

இச்சம்பளம் நடந்த அன்று தாங்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கல்லூரி மாணவிகள் பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். இருப்பினும் இதுவரை எவரும் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கல்லூரி முதல்வர் கூறுகையில், சம்பவம் நடைபெற்ற அன்று கல்லூரியில் போலிஸார், பாதுகாப்பு அதிகாரிகள் என முழுக்கண்காணிப்பில் இருந்தனர். மாணவிகள் கூறுவதுபோல எதுவும் நடந்திருக்கவாய்ப்பில்லை. வெளியில் நடக்கும் அசம்பாவிதங்களுக்கு கல்லூரி நிர்வாகம் தலையிட முடியாது” என அக்கறையின்றி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து கல்லூரி வளாகத்திற்குள் மாணவிகள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தான் இந்த சம்பவம் நடந்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது இந்த சம்பவம் குறித்து மக்களவையிலும் எழுப்பப்பட்டது. மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறுகையில், வெளியிலிருந்து சிலர் கல்லூரிக்குள் நுழைந்தார்கள் என்பது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது, அது சரியல்ல. கல்லூரி நிர்வாகத்தினர் அதைக் கவனிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன், மேலும் "குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் கூறினார்.

இதற்கிடையில், முழு சம்பவத்திற்கும் கார்கி கல்லூரி முதல்வர் புரோமிலா குமார் மன்னிப்பு கோரியுள்ளார்.

இருப்பினும், டெல்லி காவல்துறை குழு சி.சி.டி.வி காட்சிகளை சரிபார்க்க கார்கி கல்லூரியை அடைந்துள்ளது. வெளியாட்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் டி.சி.பி தெற்கு அதுல் தாக்கூர் ஏ.என்.ஐ யிடம், "நாங்கள் இது குறித்து விசாரித்து வருகிறோம், இதுவரை எந்த புகாரும் வரவில்லை.

Trending News