புதுடெல்லி: நாடு முழுவதும் சி.ஏ.ஏ (CAA) சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற வன்முறை ஆர்ப்பாட்டங்கள் குறித்து இந்திய இராணுவத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் (Bipin Rawat) கடுமையாக பதிலளித்துள்ளார். "மக்களை தவறான திசையில் வழி நடத்துபவர்கள் சரியான தலைவர்கள் அல்ல" என்று அவர் கூறியுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்கலைக்கழகங்களில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து அவர் பதிலளித்தார். இராணுவத் தலைவர் (Army Chief), "நாங்கள் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பார்க்கிறோம். நகரங்களிலும் வீதிகளிலும் வன்முறையைத் தூண்டிவிட்ட கூட்டம் மாணவர்களை வழிநடத்துகிறார்கள். இது சரியான தலைமை அல்ல.
அதே நேரத்தில், எல்லையில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள படை வீரர்களை குறித்து பேசிய அவர், "டெல்லியில் இருக்கும் நாம், குளிரில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள போராடும் நிலையில் இருக்கும் போது, சியாச்சினில் உள்ள சால்டோரோ ரிட்ஜில் உள்ள நமது வீரர்கள் தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பிற்காக நிற்கிறார்கள். அங்கு வெப்பநிலை -10 முதல் -45 டிகிரி வரை இருக்கும். அந்த வீரர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன் என்றார்.
நாடு முழுவதும் பல பல்கலைக்கழகங்களில் எதிர்ப்புக்கள் இருந்தன. டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்திலும் நடந்த போராட்டங்களின் போது வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.