ஜெர்மன் வெளியுறவு அமைச்சரின் தில்லி ஷாப்பிங்! கை கொடுத்த Paytm!

இந்தியா ஜெர்மனி இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னலெனா பேர்பாக் இந்தியா வந்த நிலையில், பரஸ்பர நலன் சார்ந்த பிரச்னைகள் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் பேர்பாக் பேச்சுவார்த்தை நடத்தினார்.   

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 7, 2022, 11:03 AM IST
  • தில்லியின் புகழ் பெற்ற சந்தை பகுதியான சாந்தினை சவுக்கில் இந்திய பாரம்பரிய உடைகளை வாங்கினார்.
  • இந்தியா மற்றும் பூட்டானுக்கான ஜெர்மன் தூதர் பிலிப் அக்கர்மேன், பேர்பாக்கின் சில படங்களைப் பகிர்ந்துள்ளார்.
  • சிஸ் கஞ்ச் குருத்வாராவில் சில பெண்களுடன் பேர்பாக் இருப்பதைக் காணலாம்.
ஜெர்மன் வெளியுறவு அமைச்சரின் தில்லி ஷாப்பிங்! கை கொடுத்த Paytm! title=

இந்தியா ஜெர்மனி இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னலெனா பேர்பாக் இரண்டு நாள் பயணமாக டிசம்பர் 5ஆம் தேதி இந்தியா வந்த நிலையில், பரஸ்பர நலன் சார்ந்த உலகளாவிய பிரச்னைகள் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் பேர்பாக் பேச்சுவார்த்தை நடத்தினார். தனது இரண்டு நாள் இந்தியா பயணத்தின் போது, ஜெர்மன் வெளியுறவுத் துறை அமைச்சர் அன்னாலேனா பேர்பாக், டெல்லியின் தெருக்களில் ஷாப்பிங் செய்ய சிறிது நேரம் ஒதுக்கினார். தில்லியின் புகழ் பெற்ற சந்தை பகுதியான சாந்தினை சவுக்கில் அவர் இந்திய பாரம்பரிய உடைகளை வாங்கினார். அப்போது அவர் பணம் செலுத்த Paytm செயலியை பயன்படுத்தியுள்ளார். 

இது தொடர்பாக, ட்விட்டரில், இந்தியா மற்றும் பூட்டானுக்கான ஜெர்மன் தூதர் பிலிப் அக்கர்மேன், பேர்பாக்கின் சில படங்களைப் பகிர்ந்துள்ளார், அதில் அவர், " ஜெர்மன் வெளியுறவு அமைச்சருடன் இந்த நாள் அற்புதமாக கழிந்தது. வெளியுறவுத் துறை அமைச்சர் S. ஜெய்சங்கருடன் சிறப்பான பேச்சுக்கள் நடந்தன. தில்லியின் புகழ் பெற்ற சிஸ் கஞ்ச் குருத்வாராவைத் தொடர்ந்து சாந்தினி சவுக்கில் ஷாஷி பன்சாலுடன் ஷாப்பிங் செய்து Paytmஐப் பயன்படுத்தி பணம் செலுத்துகிறார்!" என பதிவிட்டுள்ளார். 

ஜேர்மன் தூதுவர் பகிர்ந்த புகைப்படங்களில், சிஸ் கஞ்ச் குருத்வாராவில் சில பெண்களுடன் பேர்பாக் இருப்பதைக் காணலாம். பின்னர் சாந்தினி சவுக்கில் உள்ள ஒரு உள்ளூர் கடையில் இந்திய பாரம்பரிய ஆடைகளை பார்த்துக் கொண்டு இருப்பதையும் காணலாம். அவர் வாங்கியதற்கு பணம் செலுத்த, வெளியுறவு அமைச்சர் டிஜிட்டல் பேமெண்ட் முறையை Paytm பயன்படுத்தினார். ட்விட்டரில், பேர்பாக் இந்திய பயணம் குறித்து பதிவிடுகையில், தனது அதிகாரப்பூர்வ இந்திய பயணம் "ஒரு நண்பரைப் பார்ப்பது போல்" உணர்ந்ததாக விவரித்தார்.

அவர் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கருடன் ஒரு படத்தைப் பகிர்ந்துகொண்டு ஜெர்மன் மொழியில் எழுதிய பதிவில், "இந்த ஆண்டு நாங்கள் பரஸ்பரம் அடிக்கடி சந்தித்து கொண்டதால் மட்டுமல்ல - உலக சூழ்நிலை எங்கள் சந்திப்பின், இரு நாடுகளுக்குஇடையிலான உறவின் முக்கியத்துவத்தை தேவையை ஏற்படுத்தியுள்ளது - இந்தியாவுக்கு எனது முதல் அதிகாரப்பூர்வ பயனம். நண்பர்களே. மிக்க நன்றி, டாக்டர்.எஸ்.ஜெய்சங்கர்." என பதிவிட்டுள்ளார்

மேலும் படிக்க | என்ஆர்ஐ வட்டி விகிதங்களை அதிகரித்தது எஸ்பிஐ! சூப்பர் வட்டி விகிதம் & கால்குலேட்டர்

ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் டிசம்பர் 5 அன்று டெல்லிக்கு வந்தார், மேலும் தேசிய தலைநகரில் உள்ள ராஜ்காட்டிற்கும் சென்று மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினார். டெல்லி மெட்ரோவிலும் சவாரி செய்தார். செவ்வாயன்று, அன்னாலெனா பேர்பாக் தலைமையிலான ஜெர்மன் பிரதிநிதிகள் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்திர பாண்டே மற்றும் அருண் கோயல் ஆகியோரை நிர்வச்சன் சதனில் சந்தித்தனர்.

மேலும் படிக்க | ரகசிய காவல் நிலையங்களை உலகம் முழுவதும் வைத்துள்ள சீனா! கண்டிக்கும் கனடா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News