மொட்டை மாடியில் வெள்ளை உடை அணிந்த பேய் மீது எஃப்ஐஆர் பதிவு

Viral Video Of Ghost: வாரணாசியில் வெள்ளை உடை அணிந்த ‘பேய்’ மொட்டை மாடியில் நடமாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 27, 2022, 01:22 PM IST
  • வாரணாசியில் வெள்ளை உடை அணிந்த ‘பேய்’ மொட்டை மாடியில் நடமாடுவதால் பரபரப்பு
  • பேயின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது
  • போலீசில் புகார் அளித்த வாரணாசி மக்கள்
மொட்டை மாடியில் வெள்ளை உடை அணிந்த பேய் மீது எஃப்ஐஆர் பதிவு title=

வைரல் வீடியோ: வாரணாசியில் வெள்ளை உடை அணிந்த 'பேய்' வீட்டின் கூரைகளில் நடமாடும் வீடியோ வைரலாக பரவி, அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. செய்திகள், அச்சு ஊடகத்தில் மட்டுமே பிரதானமாக இருந்த காலம் மாறி, வீடியோக்களாகவும், டிஜிட்டல் முறைக்கும் மாறிவிட்டன. வீடியோ செய்திகள் அனைவராலும் அதிகமாக விரும்பப்படுகின்றன. சில நாட்களுக்கு முன்பு பாடி காபி பகுதியில் அமைந்துள்ள விடிஏ காலனியின் வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலானதால் மக்களிடையே தொடங்கியது.

அந்த வீடியோவில் ஒரு பெண் வெள்ளை உடையில் மிதப்பதைக் காண முடிகிறது. வீடியோ பரவியதும், பீதி ஏற்பட்டது, காலனியில் 'பேய்' உலாவுவதாக பயந்த மக்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை கூட நிறுத்திவிட்டார்கள். அதன் பிறகும் இதுபோன்ற மேலும் மூன்று வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்து, மக்களின் அச்சத்தை அதிகமாக்கின.

சில உள்ளூர்வாசிகள் அந்த வீடியோ உண்மையானது என்று நினைத்து பயந்தாலும், பெரும்பாலானவர்கள் இது போலியான வீடியோ என்றும் கூறியுள்ளனர். ஆனால், இந்த விஷயம் தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பாய்ந்து வந்து கட்டிக்கொண்ட பெண் சிங்கம்: பாசமா, பகையா?

"இது ஒரு போலி வீடியோவாகத் தெரிகிறது, ஆனால் மக்களிடையே நிறைய பயம் உள்ளது, எனவே உண்மையை வெளிப்படுத்த இந்த விஷயத்தை விசாரிக்க காவல்துறையை அணுக முடிவு செய்தோம்" என்று உள்ளூர்வாசி சுரேஷ் சிங் கூறினார்.

வைரலாகும் பேய் வீடியொவை பாருங்கள்

தற்போது பேலுப்பூர் காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க | பாய்ந்து வந்து மானை தாக்கும் சிங்கம்! தப்ப முடியாமல் கதறும் காட்டு மான்

மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. அவர்களின் புகாரின் பேரில், அடையாளம் தெரியாத நபர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து, அப்பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளோம் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பேய் உண்மையிலுமே இருக்கிறதா இல்லையா என்பதை யாராலும் சொல்ல முடியாது என்றாலும், மனதில் பேய் பற்றிய அச்சம் பெரும்பாலானவர்களிடையே குடி கொண்டிருக்கிறது. 

இதற்கிடையில், வாரணாசியில் இதுபோன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்றும், இதுபோன்ற வைரல் வீடியோக்களை அனுப்ப வேண்டாம் என்றும் டிசிபி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

மேலும் படிக்க | சிங்கிளாக வந்து சிங்கக்கூட்டத்தை சிதறடிக்கும் ஆக்ரோஷமான விலங்கு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News