18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி -அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

டெல்லி லாக் டவுன் அப்டேட்ஸ்: 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசிகள் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 26, 2021, 01:25 PM IST
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி -அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

டெல்லியில் தற்போதைய ஊரடங்கு மீண்டும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு மே 3 அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும். கோவிட் -19 தொற்று தொடர்ந்து டெல்லி நகரத்தை அழித்து வருகிறது. சனிக்கிழமையன்று 24,103 பேருக்கும், ஞாயிற்றுக்கிழமை அன்று 22,933 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களில் கோவிட் சோதனைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 75,912 பேருக்கு மட்டுமே சோதனைகள் நடத்தப்பட்டன.

டெல்லி அரசு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசிகளை வழங்க முடிவு செய்துள்ளது. இதுக்குறித்து பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "1.34 கோடி தடுப்பூசிகள் வாங்க ஒப்புதல் அளித்துள்ளோம். இது விரைவில் வாங்கப்பட்டு மக்களுக்கு விரைவாக செலுத்தப்படுவதை உறுதிசெய்ய நாங்கள் முயற்சிப்போம் எனக் கூறியுள்ளார். 

தனியார் மருத்துவமனைகள் மூலம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வோர்கள் பணம் செலுத்த வேண்டியிருக்கும்.

ALSO READ |  #BREAKING: மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம்: மத்திய அரசு அரசு அறிவிப்பு

அதேபோல மத்திய அரசு, கடந்த வாரம் மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News