நாட்டின் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும்- பிரதமர் மோடி

75 வது சுதந்திர தின கொண்டாட்டம் நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 15, 2021, 10:28 AM IST
நாட்டின் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும்- பிரதமர் மோடி title=

புதுடெல்லி: இன்று நாட்டின் 75 வது சுதந்திர தினம். பிரதமர் நரேந்திர மோடி, செங்கோட்டையில் இருந்து தனது உரையில், உலகின் தற்போதைய சவால்களுக்கு மத்தியில் இந்தியா வலுவடைவது பற்றி பேசினார். நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி பிரதமர் தனது உரையை தொடங்கினார்.

செங்கோட்டையின் அரண்மனையில் இருந்து பிரதமர் மோடி (Prime Minister Narendra Modi) இன்று 8 வது முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றினார். சுதந்திர தினத்திற்காக (Independence Day) எண்ணற்ற மாவீரர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்ததாக பிரதமர் தனது உரையில் கூறினார். நாட்டு மக்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். நமது விடுதலை போராட்ட வீரர்களை நினைவுகூர்வதற்கான தினம் இன்று. மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட அனைவரின் தியாகத்தையும் நினைவுகூர்வோம். 

ALSO READ | 75வது சுதந்திர தினம்- தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

கொரோனா காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், தடுப்பூசி தயாரித்தவர்கள் அனைவருக்கும் நன்றி. கொரோனாவுக்கு எதிரான போரில் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு நாட்டின் பெருமையை உலகறிய செய்தவர்கள் இந்த விழாவல் பங்கேற்றுள்ளார்கள். கொரோனா காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், தடுப்பூசி தயாரித்தவர்கள் அனைவருக்கும் நன்றி. கொரோனாவுக்கு எதிரான போரில் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு நாட்டின் பெருமையை உலகறிய செய்தவர்கள் இந்த விழாவல் பங்கேற்றுள்ளார்கள்.

ஒலிம்பிக்கில் இந்தியா புதிய வரலாறு படைத்தது மிகப்பெரிய விஷயம். டோக்கியோ ஒலிம்பிக்கில் நம்மை பெருமைப்படுத்திய விளையாட்டு வீரர்கள் இன்று நம்மிடையே இருக்கிறார்கள். 

இங்கிருந்து தொடங்கும் அடுத்த 25 ஆண்டுகளின் பயணம் புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான அமிர்தம் என்று பிரதமர் கூறினார். இந்த அமிர்த காலத்தில் எங்கள் தீர்மானங்களை நிறைவேற்றுவது சுதந்திரம் பெறும் 100 ஆண்டுகள் வரை நம்மை அழைத்துச் செல்லும்.

அனைத்து கிராமங்களிலும் 100 சதவீதம் சாலை, 100 சதவீதம் வங்கிக் கணக்கு என்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். அரசின் திட்டங்கள் ஒரு சிலரை கூட சென்றடையாமல் போகும் அவல நிலை இல்லை. நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரோக்கியத்தை அளிப்பது அரசின் முக்கிய பணியாகும். மக்கள் மருந்தகம் மூலம் ஏழை, நடுத்தர மக்களுக்கும் குறைந்த விலையில் தரமான மருந்துங்கள் வழங்கப்படுகின்றன. ஏழைகளுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் நல்ல சத்தான அரிசி வழங்கப்படுகிறது.

பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் இட ஒதுக்கீடு திட்டத்தை சமீபத்தில் நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். அம்ருத் மகோத்ஸவம் திட்டத்தை 2023 ஆம் ஆண்டு சுதந்திர தினம் வரை கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சிறிது காலத்தில் மிகப் பெரிய திட்டம் ஒன்றை நாட்டுக்கு கொண்டு வர இருக்கிறோம். நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக தடைக்கற்களைத் தாண்டி செல்லும் வகையில் மிகப் பெரிய திட்டம் வரப்போகிறது. நம்முடைய தொழில்துறை உலக நாடுகளுடன் போட்டியிட இந்த திட்டம் உதவி செய்யும். கதி சக்தி என்ற இந்த வேகமான திட்டம் நாட்டின் வளர்ச்சியை வேகமடையச் செய்யும். 

நம்நாட்டில் இருந்து செல்போன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நம் தயாரிப்புகள் தரமானதாக இருக்க வேண்டும். அதில் மட்டுமே நாட்டின் பெருமை உள்ளது. நாட்டின் புதிய தொழில்முனைவோரை உலகின் மிகப் பெரிய தொழில் துறையினராக மாற்ற முயற்சி மேற்கொண்டுள்ளோம். 100 லட்சம் கோடி ரூபாயில் இந்த கதி சக்தி திட்டம் செயல்படுத்தப்படும். கொரோனா நீண்ட காலம் நம்மோடு இருக்க போகிறது. உலக நாடுகளை காட்டிலும் இந்தியாவில் ஏராளமானவர்களை கொரோனாவிலிருந்து மீட்டெடுத்துள்ளோம்.

ALSO READ | Independence Day 2021: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News