சாந்தாராம் பிறந்தநாளை கொண்டாடிய கூகுள்!!

இந்திய திரையுலகிற்குத் தனி பெருமையையும், இந்திய சினிமாவில் பெண்களுக்கு முதலில் நடிக்க வாய்ப்புக் கொடுத்த இயக்குனர் சாந்தாராமின் 116-வது   பிறந்தநாளை கூகுள் கொண்டாடியது.

Last Updated : Nov 18, 2017, 05:49 PM IST
சாந்தாராம் பிறந்தநாளை கொண்டாடிய கூகுள்!! title=

உலக அரங்கியலில் இந்திய திரைத்துறைக்கு தனி மதிப்பைத் ஏற்படுத்திய சாந்தாராம் ராஜாராம் வன்குட்ரே நவம்பர்-18, 1901-ல் மகாராஷ்ட்ராவில் பிறந்தார். 

இவர் 20-ம் வயதிலேயே நடிகனாக திரையுலகில் கால் பதித்தார். பின்னர், இவர் இந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களின் இயக்குனராகவும், "பிரபாத்" என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினர்.

பின்னர், இவர் மும்பையில் ராஜ்கமல் என்ற ஸ்டுடியோவையும் துவங்கினர். அதுமட்டுமின்றி இவர் இயக்கிய திரைபடத்தில் முதன் முதலில் பெண்ணிற்கு நடிக்க வாய்பளித்த உயர்ந்த மனிதனும் இவர்தான். 

 இவர் 1986-ல் தாதா சாகேப் பால்கே விருதைப்பெற்றார். மேலும் இவர் பத்ம விபூஷன், பிலிம்பேர் போன்ற பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் இயக்கிய ‘தோ ஹாங்கேன் பாரா ஹாத்’ திரைப்படம் ஜனாதிபதியின் வெள்ளிப்பதக்கத்தையும், இந்தியாவில் ஜனாதிபதியின் தங்கப்பதக்கத்தையும் பெற்றது. இத்திரைப்படம் தமிழில் எம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பல்லாண்டு வாழ்க’ என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது. 

 இன்று சாந்தாராம் ராஜாராம் வன்குட்ரே 116-வது பிறந்தநாளை கூகுள் டூடுல் வைத்து கொண்டாடியது.

Trending News