இந்தியாவில் கூகுள் ஹோம் என்ற அசிஸ்டென்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை ரிலையன்ஸ் கடைகளில் வாங்கினால் ஜியோ வைபை இலவசமாக கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் என அறியப்படும் கபிரியேல் ஜோஸ் டி லா கான்கோர்டியா கார்சியா மார்க்கேஸ் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் 1927 ஆம் அண்டு மார்ச் 6 ம் தேதி கொலம்பியாவின் அரக்காடாகாவில் கேப்ரியல் எலிஜியோ கார்சியா மற்றும் லூயிசா சாண்டியாகா மார்க்வெஸ் இகுயரன் ஆகியோருக்கு பிறந்தார். இவர் கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு புதின எழுத்தாளரும், சிறுகதை எழுத்தாளரும், திரைக்கதை எழுத்தாளரும், பத்திரிகையாளரும் ஆவார்.
69_வது இந்திய குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குடியரசு தினவிழாவையொட்டி நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு சுலபமான வழிகளைத் தேர்தெடுக்கும் வகையில் கூகுள் மேப்பில் பைக் ஓட்டுபவர்களுக்கு என பிரத்யேகமான புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய திரையுலகிற்குத் தனி பெருமையையும், இந்திய சினிமாவில் பெண்களுக்கு முதலில் நடிக்க வாய்ப்புக் கொடுத்த இயக்குனர் சாந்தாராமின் 116-வது
பிறந்தநாளை கூகுள் கொண்டாடியது.
இந்தியாவின் முதல் பெண் வக்கீல் கார்னிலியா சொராப்ஜியின் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை கவுரவிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இன்று இந்தியா முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆசிரியர் சிறப்பு தினத்தை கொண்டாடும் விதமாக் கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் ஒன்றை கொண்டு தனது முகப்பை அலங்கரித்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. 1888-ம் ஆண்டில் பிறந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் தனது முதல் பக்கத்தில் உள்ள கூகுள் டூடுலில் இந்திய சின்னத்தை இடம்பெறச் செய்துள்ளது.
விடுமுறை தினங்கள், உலக நிகழ்வுகள், சாதனை செய்த மனிதர்களை கொண்டாடும் விதமாக் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் கூகுள் டூடுலில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் இன்று 71-வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கூகுள் நிறுவனம் தனது டூடுலில் இந்திய தேசியப் பறவையான மயில் இருபுறமும் வீற்றிருக்க, அதற்க்கு நடுவில் அசோகச் சக்கரமும், மேலே பாராளுமன்றம் கட்டிடம் இடம்பெற்றுள்ளது.
உலகின் மிகப்பெரிய சர்ச் என்ஜின் நிறுவனமாக விளங்கும் கூகிள்லில் வேலை செய்ய வேண்டும் என்பது, இந்தியாவில் இருக்கும் அனைத்துப் பட்டதாரிகளின் கனவாக இருக்கும்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கி 140 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டு வரவேற்றுள்ளது.
இந்த டூடுள் கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் விளையாடுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. பந்துவீச்சாளர் பந்து வீசுவது போன்றும் அதனை பேட்ஸ்மேன் அடிப்பதும், பீல்டர்கள் அதனை பிடிக்க முயல்வது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் 1877-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.