டெல்லி-யின் முக்கிய இடங்களின் பெயரை மாற்றும் டெல்லி அரசு!

டெல்லியின் புகழ்பெற்ற 'பிரகதி மைதான மெட்ரோ நிலையம்' 'உச்ச நீதிமன்ற மெட்ரோ நிலையம்' என மறுபெயரிடப்பட்டுள்ளது, மேலும் மாற்றங்கள் டெல்லி மெட்ரோ அமைப்பில் சுமார் ஒரு மாத காலத்திற்குள் பிரதிபலிக்கத் தொடங்கும் என்று மாநில அரசு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 31) அறிவித்துள்ளது!

Updated: Dec 31, 2019, 06:20 PM IST
டெல்லி-யின் முக்கிய இடங்களின் பெயரை மாற்றும் டெல்லி அரசு!

டெல்லியின் புகழ்பெற்ற 'பிரகதி மைதான மெட்ரோ நிலையம்' 'உச்ச நீதிமன்ற மெட்ரோ நிலையம்' என மறுபெயரிடப்பட்டுள்ளது, மேலும் மாற்றங்கள் டெல்லி மெட்ரோ அமைப்பில் சுமார் ஒரு மாத காலத்திற்குள் பிரதிபலிக்கத் தொடங்கும் என்று மாநில அரசு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 31) அறிவித்துள்ளது!

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இந்த அறிக்கைகளை உறுதிப்படுத்தியதோடு, பல கோரிக்கைகளைப் பெற்ற பின்னர் அரசாங்கம் இந்த முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் "கார்கில் போரில் தனது உயிரைத் தியாகம் செய்த தியாகியை பின்னோக்கிப் பார்க்கும் விதமாக முகர்பா சௌக் மற்றும் ப்ளைஓவர் ஆனது 'கேப்டன் விக்ரம் பாத்ரா சௌக்' என்று பெயர் மாற்றப்பட்டுள்ளன," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய தலைநகரில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய சிசோடியா, மெட்ரோ ரயில் அறிவிப்புகளில் ஆடியோவை மாற்றுவது உள்ளிட்ட முழு பெயர் மாற்றும் செயல்முறையும் ஒரு மாதத்தில் செய்யப்படும் என்று தெரிவித்தார். 

அதேவேளையில் பதர்பூர்-மெஹ்ராலி சாலை உள்ளிட்ட பல சாலைகள் மறுபெயரிடப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். அதன்படி பதர்பூர்-மெஹ்ராலி சாலை ஆச்சார்யா ஸ்ரீ மகாபிராக்யா மார்க் என்று பெயரிடப்படும், என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறுகையில், தேர்வு செய்யப்படாத பட்டியலில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், மின்மயமாக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் வசூலிக்கும் அதே கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., "முன்னதாக, மின்மயமாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மின்மயமாக்கப்படாத பகுதிகளில் வெவ்வேறு மின் விகிதங்கள் பயன்படுத்தப்பட்டன. இப்போது, ​​மின்மயமாக்கப்படாத பகுதிகளின் விகிதங்கள் மின்மயமாக்கப்பட்ட பகுதிகளுக்கு சமமாக செய்யப்பட்டுள்ளன. ஒரு வருடத்தில் மக்களிடமிருந்து எடுக்கப்படும் கூடுதல் கட்டணங்கள் திருப்பித் தரப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், தில்ஷாத் கார்டன்-நியூ பஸ் அடா பிரிவில் இரண்டு நிலையங்கள் நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்விட்ட வீராங்கனைகளின் நினைவாக மறுபெயரிடப்பட்டன என்று DMRC அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். அதன்படி 'ராஜேந்திர நகர் மெட்ரோ நிலையம்' மேஜர் மோஹித் சர்மா ராஜேந்திர நகர் நிலையம் என மறுபெயரிடப்பட்டுள்ளது, அதேப்போல் 'புதிய பஸ் அடா' 'ஷாஹீத் ஸ்தால்' என மறுபெயரிடப்பட்டுள்ளது," என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.