பிரபல மலையாள பத்திரிக்கை கிரகலட்சுமி இதழ் - அட்டைப்படம் தொடர்பான வழக்கில் கேரளா உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்பினை தான் வரவேற்பதாக குற்றம்சாட்டப்பட்ட ஜிலு ஜோசப் தெரிவித்துள்ளார்!
கடந்த மார்ச் மாதம் மேற்குறிபிடப்பட்ட கிரகலட்சுமி இதழ் துணிச்சலான அட்டைப் படம் ஒன்றை வெளியிட்டது. தாய் ஒருவர் தன் குழந்தைக்கு பால் ஊட்டுவது போன்ற அப்படம் நாடுமுழுவதும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இந்த புகைப்படத்திற்கு மாதிரியாய் நின்ற ஜிலு ஜோசப்-னை ஆரம்பத்தில் தூற்றிய பலரும் பின்னர் படத்தின் நோக்கத்தை புரிந்து கொண்டு அவரை பாராட்டினர்.
தனது குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவது போல் கொடுக்கப்பட்ட போஸ் குறித்து ஜிலு ஜோசப், தாய்ப்பால் புகட்டுவது என்பது இயல்பான நிகழ்வு. இது பெண்களுக்கு கிடைத்துள்ள வரம். இதை தப்பான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்கள் மீதுதான் தப்பு உள்ளதே தவிர, தாய்ப்பால் கொடுக்கும்போது மறைத்துக் கொண்டு கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
இதன் நல்ல நோக்கத்தை உணர்ந்துதான், நான் மறு பேச்சு பேசாமல் இதற்கு சம்மதித்தேன் என்று கூறினார். கன்னியாஸ்திரியாக உள்ள தனது மூத்த சகோதரியும் தனது தாயும் இதுபோல் போஸ் கொடுக்க வேண்டாம் என்று கூறினர். அவர்கள் கருத்தை நான் மதித்தபோதிலும், எனக்கு சரி என்று பட்டதை நான் செய்துவிடுவேன்.
அந்த வகையில்தான் இந்த புகைப்படத்திற்கு சம்மதம் தெரிவித்தேன் என்கிறார் ஜிலு ஜோசப். கிரிகலட்சுமி பத்திரிகை, இதற்காக ஜிலு ஜோசப்பை அணுகியபோது, அவர் மறுப்பேதும் கூறாமல் இதற்கு சம்மதித்துள்ளாராம் ஜிலு ஜோசப்.
இதனையடுத்து இந்த புகைப்படம் தாய்மையினை இழிவுபடுத்துவதாய் உள்ளது என, கேரள வழக்கறிஞர் வினோத் மேத்திவ் வில்சல் என்பர் கொல்லம் சி.ஜே.எம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கினை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், காமம் பார்பவர்கள் கண்னில் தான், புகைப்டத்தில் இல்லை எனவும், பத்திரிக்கையின் அட்டைப்படத்தினை மறைக்க இயலாது எனவும் தீர்ப்பளித்தது.
I'm really happy with the judgement because we live in a society where art is not always appreciated in the right sense. Personally, I'm much more than my body: Gilu Joseph, Model on Kerala HC verdict on Grihalakshmi magazine's 'breastfeeding' cover pic pic.twitter.com/Gcl6L0O0iU
— ANI (@ANI) June 24, 2018
இந்நிலையில் இந்த தீர்ப்பு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாவும், நீதிபதிகளின் தீர்ப்பினை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.