மாநிலங்களவையில் காலியாக உள்ள ஆறு இடங்களுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது..!
குஜராத்தில் இரண்டு மாநிலங்களவை (RS) இடங்களுக்கான இடைத்தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெறும். இந்த ஆண்டு மே மாதம் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக தலைவர் அமித்ஷா, ஸ்மிருதி இரானி மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் தமது மாநிலங்களவை பதவியை துறந்ததால் குஜராத்தில் இரண்டு காலியிடம் உருவானது. இதனை சேர்த்து குஜராத்தில் இரண்டு இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
நாடாளுமன்றத்தின் மேலவையின் இரண்டு இடங்களுக்கு மாநில எம்.எல்.ஏக்கள் விதான் சபையில் வாக்களிக்கவுள்ளனர். வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் ஓபிசி தலைவர் ஜுகல்ஜி தாக்கூர் ஆகியோர் பாரதிய ஜனதா களத்தில் களமிறக்கப்பட்டுள்ளனர், காங்கிரஸ் சந்திரிகா சுதாசமா மற்றும் காரவ் பாண்ட்யாவை நிறுத்தியுள்ளது.
இடைத்தேர்தல்கள் காந்திநகரில் குஜராத் விதான் சபாவின் நான்காவது மாடியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.
கட்சி மாறி வாக்களிப்பதைத் தடுக்க பனசகாந்தா பகுதியில் உள்ள நட்சத்திர சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த 69 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் வாக்களிப்பதற்காக இன்று தலைநகருக்கு அழைத்து வரப்படுகின்றனர். முன்னதாக நேற்றிரவு மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிப்பது எப்படி என்பது குறித்து செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவரது பீகார் மாநிலங்களவை உறுப்பினர் இடம் காலியிடமாக அறிவிக்கப்பட்டது. இதே போன்று ஒடிசாவிலும் மூன்று காலியிடம் உள்பட மொத்தம் 6 இடங்களுக்கு தேர்தல் இன்று நடைபெறுகிறது.