கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் வன்முறை வெடித்தது. அப்போது வன்முறைக் கும்பல் ''குல்பர்க் சொசைட்டி'' இருந்த முஸ்லிம் 69 பேரை படுகொலை செய்தது. இந்த கொலையில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஈசன் ஜாப்ரியும் கொல்லப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்றம் கண்காணிப்பில் நடந்து வந்தது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.பி தேசாய் இன்று தீர்ப்பு வழங்க உள்ளார்.
இந்த தீர்ப்பில் அகமதாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 36 பேரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் 24 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.