ஜம்மு-வில் துப்பாக்கிச்சண்டை: பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலி!!

ஜம்மு காஷ்மீர் சர்வதேச எல்லை அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்றிரவு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய எல்லைப்பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார். 

Last Updated : Jan 18, 2018, 10:05 AM IST
ஜம்மு-வில் துப்பாக்கிச்சண்டை: பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலி!! title=

ஜம்மு- காஷ்மீர் சர்வதேச எல்லை அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்றிரவு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய எல்லைப்பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ் புரா செக்டார் பகுதியில் சர்வதேச எல்லை அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்றிரவு இந்திய நிலைகளை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். சிறிய ரக மோட்டார் குண்டுகளையும் அவர்கள் தாக்குதலில் பயன்படுத்தினர்.

தொடர்ந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தவே இதற்கு பதிலடியாக பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் ஒரு பாதுகாப்பு படை வீரர் பலியாகினர்.

பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியப் படைகள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ரானுவ மேஜர் உட்பட 7 பேர் பலியாகினர். இந்நிலையில், இரண்டாவது முறையாக பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது குறிபிடத்தக்கது.

இது குறித்து இன்னும் முழுமையான தகவல் எதுவும் வெளிவரவில்லை.

Trending News