தன் மகனின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வில்லை என கூறி தனது பாட்டியை கொன்ற அரியாணா மாநில ஆண் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்!
அரியாணா மாநிலத்தின் பாத்தேப்பாட் பகுதியை சேர்த 70 வயது மூதாட்டி ரமா தேவி., இவர் தனது கொல்லு பேரனின் பிறந்த நாள் நிகழ்ச்சியல் கலந்துக்கொள்ள வில்லை என கூறி இவரது பேரன் இவரை கொன்றுள்ளார்.
பலியான ரமாதேவி தனது இரு மகன்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனித்து வாழ்ந்து வருவததாக தெரிகிறது. இந்நிலையில் ரமாதேவியின் மகன் வழி பேரன் விக்கி என்பவர் தனது குறந்தைக்கு பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்துள்ளார். விழாவிற்கு ரமாதேவியை அழைத்தும் உள்ளார். ஆனால் ரமாதேவி குழந்தையின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க தவறியுள்ளார்.
இதனால் ஆத்திரமுற்ற விக்கி, ரமாதேவியின் வீட்டிற்கே சென்று வாக்குவாதம் நடத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் வாய்வார்த்தை முற்றி விக்கியை கொலைகாரணாக மாற்றியுள்ளது.
காவல்துறையின் தகவல்களின் படி விக்கி, ரமாதேவியை இரும்பு கம்பி கொண்டு தாக்கியிருப்பதாக தெரிகிறது. இதனையடுத்து ரமாதேவியை மருத்துவமனைக்கு சென்றதாகவும், ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரமா தேவி மரணித்ததாகவும் தெரிகிறது.
இச்சம்பவம் குறித்து குற்றம் சாட்டப்பட்ட விக்கி, அவரது தாயார் நிர்மலா மற்றும் தந்தை ஜெய் குமார் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்கு தொடுத்துள்ளனர். இதனையடுத்து தற்போது விக்கி மற்றும் நிர்மலாவை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் தெரிகிறது. மூன்றாவது குற்றவாலியான ஜெய்குமாரை விரைவில் பிடிப்போம் என காவல்துறை ஆய்வாளர் சுரேந்திர கம்போஜ் தெரிவித்துள்ளார்.