கர்நாடகாவில் உள்ள கூட்டணி அரசாங்கம் ஒவ்வொரு நாளிலும் பாதிக்கப்படக்கூடியதாக இருக்கிறது என தனது உணர்சியை எச்.டி குமாரசாமி கண்ணீர் மல்க வெளிபடுத்தியுள்ளார்!!
கர்நாடகாவில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் - ஜேடிஎஸ் (JDS) கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதை தொடர்ந்து, ஜேடிஎஸ் வேட்பாளர் குமாரசாமி முதலமைச்சராக பதவியேற்றார். இதையடுத்து
காங்கிரஸ் கட்சி பல்வேறு நிபந்தனைகளை விதிப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. அவரது பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் பெங்களூருவில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘ விஷகாந்த் போல் நான் விஷத்தை விழுங்கி விட்டேன். நான் மகிழ்ச்சி இல்லை. நான் முதல்வராக இருப்பதில் தொண்டர்களும் மக்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். ஆனால், நான் மகிழ்ச்சியாக இல்லை. முதல்வர் பதவி என்பது ரோஜாப்பூ படுக்கை அல்ல.
முட்கள் நிறைந்த படுக்கை. லட்சியங்கள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் பணியாற்ற வேண்டும். பா.ஜ.கவின் தாக்குதல்களை எதிர்கொண்டு பதிலடி கொடுக்க வேண்டும். எனது கட்சியான ம.ஜ.த-வின் லட்சியங்களையும் நிறைவேற்ற வேண்டும். முதல்வர் பதவி இப்படியே எனக்கு நெருக்கடிகள் கூடினால் எந்த நேரத்திலும் முதல்வர் பதவியை விலக நான் தயாராக உள்ளேன். ஆட்சி, அதிகாரத்துக்காக நானில்லை. விவசாயிகளையும் அவர்களது கடனையும் தள்ளுபடி செய்யவே முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளேன்.
எனது கட்சி தனி பெரும்பான்மை பெரும் அளவுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை என்பதில் எனக்கு வருத்தம் உண்டு. விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வதில் எந்த மாநிலத்துக்கும் விருப்பம் இல்லை, அக்கறை இல்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் எத்தனை நெருக்கடி கொடுத்தாலும் நான் அளித்த வாக்குறுதியை காப்பாற்றி விட்டேன் எனப் பேசினார். அவரது இந்தப்பேச்சு காங்கிரஸ் கட்சியின் நிபந்தனைகளால் வெளிப்பட்டதாக கூறப்படுகிறது.
#WATCH: Karnataka CM HD Kumaraswamy breaks down at an event in Bengaluru; says 'You are standing with bouquets to wish me, as one of your brother became CM & you all are happy, but I'm not. I know the pain of coalition govt. I became Vishkanth&swallowed pain of this govt' (14.07) pic.twitter.com/cQ8f90KkFT
— ANI (@ANI) July 15, 2018
இதை தொடர்ந்து அவர் பேசுகையில், கடந்த ஒரு மாதத்தில், விவசாய கடனை தள்ளுபடிக்காக அதிகாரிகளை சம்மதிக்க வைக்க நான் செய்த சித்துவேலைகள் யாருக்கும் தெரியாது. தற்போது அவர்களுக்கு அன்ன பாக்யா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 5 கிலோ அரிசிக்கு பதில் 7 கிலோ அரிசி வழங்க வேண்டும் என்கின்றனர். இதற்கு 2,500 கோடி ரூபாய் பணத்திற்கு எங்கு செல்வேன். வரி விதிப்பு தொடர்பாகவும் என்னை விமர்சிக்கின்றனர் என தெரிவித்தார்.