குஜராத்தில் ரூ.350 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்; 6 பாகிஸ்தானியர் கைது!

அரேபிய கடலில் சர்வதேச கடல் எல்லைக் கோட்டிற்கு (IMBL) அருகில் உள்ள இந்திய கடல் பகுதியில் அல் சகர் என்ற படகில் கொண்டு வரப்பட்ட ரூ.350 கோடி மதிப்புள்ள 50 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 8, 2022, 05:05 PM IST
  • அல் சகர் என்ற படகில் கொண்டு வரப்பட்ட ரூ.350 கோடி மதிப்புள்ள 50 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
  • ICG மற்றும் குஜராத் ஏடிஎஸ் படகில் இருந்த ஆறு பாகிஸ்தானியர்களையும் கைது செய்தன.
குஜராத்தில் ரூ.350 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்; 6 பாகிஸ்தானியர் கைது! title=

கட்ச் (குஜராத்): இந்திய கடலோர காவல்படை (ICG ) மற்றும் குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு (ஏடிஎஸ்) இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில், குஜராத் கடற்கரையில் பாகிஸ்தான் படகில் கொண்டு வரப்பட்ட ரூ.350 கோடி மதிப்புள்ள 50 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. அரேபிய கடலில் சர்வதேச கடல் எல்லைக் கோட்டிற்கு (IMBL) அருகில் உள்ள இந்திய கடல் பகுதியில் அல் சகர் என்ற படகில் இருந்து ஆறு பாகிஸ்தானியர்களை ICG மற்றும் குஜராத் ATS கைது செய்தது. குஜராத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகத்தில் படகு மேலும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்திய கடலோர காவல்படை தனது ட்விட்டர் பக்கத்தில், "ஏடிஎஸ் குஜராத்வுடன் இணைந்து நடத்திய சோதனையில், சுமார் 350 கோடி மதிப்புள்ள சுமார் 50 கிலோ ஹெராயின் கொண்டு சென்ற பாகிஸ்தான் படகு அல் சாகரை, 6 பேர்களுடன் அரபிக்கடலில் இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்தனர். மேலதிக விசாரணைக்காக ஜகாவுக்கு கொண்டு வரப்பட்டது” என பதிவிடப்பட்டது.

மேலும் படிக்க | குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு... 4ம் நாளாக குளிக்க தடை!

"நள்ளிரவில், ஒரு பாகிஸ்தானிய படகு இந்திய கடற்பரப்பில், IMBL-ல் 5 நாட்டிகல் மைல்கள் மற்றும் ஜக்காவ்விலிருந்து 40 நாடிகல் மைல்கள் தொலைவில், சந்தேகத்திற்கிடமான வகையில் வருவதை கண்ட நிலையில், இந்திய கடலோர படை கண்காணிக்க தொடங்கியது. இதில், பாகிஸ்தான் படகு தப்பிக்க முயன்றது. இருப்பினும், இரு கப்பல்களும் பாகிஸ்தான் படகை இடைமறித்து கைப்பற்றின. படகில் ஏறும் போது, ​​50 கிலோ எடையுள்ள ஹெராயின் என நம்பப்படும் போதைப்பொருள், 5 சாக்கு பைகளில் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை முழுமையாக அலசி ஆராய்ந்தனர்" என கடலோர காவல் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் குஜராத்தின் ஐசிஜி மற்றும் ஏடிஎஸ் இணைந்து நடத்திய ஆறாவது நடவடிக்கை இதுவாகும். செப்டம்பர் 14 அன்று பாகிஸ்தான் படகில் இருந்து 40 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

மேலும் படிக்க | தமிழகத்தில் ‘இந்த’ மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News