புதுடெல்லி: நமது தினசரி வாழ்க்கையில் பல ஆச்சரியங்களையும், விநோதங்களையும் பார்க்கிறோம். அதுதான் வாழ்வின் சுவராசியமும் கூட. ஆனால், தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் இணையதளம் மூலம் உடனடியாக உலகம் முழுவதும் ப்ரவி திகைப்பை ஏற்படுத்துகிறது.
டெல்லி போன்ற பரபரப்பான மக்கள்தொகை அதிகம் கொண்ட ஒரு மாநகரில் ராட்சதப் பல்லியை பார்த்து அனைவரும் அதிர்ந்து போனார்கள். அந்த பல்லியின் படம் சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
வினோதமான மற்றும் வித்தியாசமான காட்சிகளை வீடியோக்களாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிடுவதால் அவை வைரலாகின்றன. தற்போது டிரெண்டிங்கில் இருக்கிறது டெல்லியில் ராட்சத பல்லியின் தோற்றம்.
Read Also | வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்படுவதும் கொரோனாவின் அறிகுறியா?
ஜம்போ அளவிலான மானிட்டர் பல்லி டெல்லியில் உள்ள ஒரு வீட்டில் காணப்பட்டது மற்றும் சமூக ஊடக தளங்களில் பரவலாக பகிரப்பட்டது. IPS, HGS Dhaliwal தனது ட்விட்டரில் இந்த காட்சியைப் பகிர்ந்துள்ளனர்.
Spotted at someone’s home in Delhi!! pic.twitter.com/4HG9vMhQ7V
— HGS Dhaliwal (@hgsdhaliwalips) July 9, 2020
நெட்டிசன்களின் எதிர்வினைகளும் வைராலாகின்றன. டெல்லி வீட்டில் நெருப்புக்கோழியை (Ostrich) செல்லப்பிராணியாக ஒருவர் வளர்ப்பதை ஒருவர் பகிர்ந்துக் கொண்டது ஆச்சரியமாக இருக்கிறது.
மானிட்டர் பல்லிகள் (Monitor lizards) எனப்படும் பல்லிக்கு நீண்ட கழுத்து, வால்கள் மற்றும் நகங்கள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை இயற்கையில் மாமிச உணவுகள், மீன், முட்டை, ஊர்வன, பூச்சிகள் மற்றும் பறவைகளை சாப்பிடுகின்றன, ஆனால் காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிடும் சில விதிவிலக்கு பல்லிகளும் உள்ளன.
இதுபோன்ற வினோதமான மற்றும் திகைப்பளிக்கும் வீடியோக்கள் இணையதளத்தில் உலா வருகிறது. உங்கள் அடுத்த கிளிக்கில் நீங்கள் எதை பார்ப்பீர்கள் என்று சொல்லிவிடுவது சுலபமானதா என்ன?