விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தை குறித்து சண்முக சுப்பிரமணியன் பேட்டி அளித்து உள்ளார்.
நிலவில் தரையிறங்கும் போது காணாமல் போன விக்ரம் லேண்டரை கண்டுபிடித்ததாக நாசா அறிவித்துள்ளது. விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தையும், பாகங்களையும் நாசாவின் செயற்கைக்கோள் கண்டுபிடித்துள்ளது. மேலும் நிலவுக்கு தாங்கள் அனுப்பிய செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
நிலவின் தென்பகுதியில் சந்திரயான் விண்கலனை தரை இறக்கி உலக சாதனை நிகழ்த்தவிருந்தது இந்தியா. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து ஜூலை 22 ஆம் தேதி GSLV மார்க் 3 ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் சரியான பாதையில் விண்ணில் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது. கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி அதிகாலை சந்திரயான் 2 விண்கலம் நிலவில் தரையிறங்குவதாக இருந்தது.
ஆனால், நிலவிலிருந்து 2.1 KM தொலையில் விக்ரம் லேண்டருக்கும் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் சந்திரயான் 2 விண்கலத்தை நிலவில் நிலை நிறுத்தும் இஸ்ரோவின் திட்டம் பின்னடைவைச் சந்தித்தது. ஆனாலும், விக்ரம் லேண்டரிடம் இருந்து தொடர்பை பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சித்து வந்தனர். அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவும், இஸ்ரோவுக்கு உதவியாக விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சித்தது. இந்நிலையில் விக்ரம் -2 லேண்டரின் உடைந்த பாகங்கள் நிலவின் மேற்பரப்பில் இருப்பதுகண்டறிப்பட்டதாக நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக ஆய்வு செய்த தமிழக இளைஞர் சண்முக சுப்பிரமணியன், விக்ரம் லேண்டரின் பாகங்கள் விழுந்த இடத்தை கண்டுபிடித்து நாசாவுக்கு இமெயில் மூலம் தகவல் அனுப்பி உள்ளார். அவரது ஆய்வை நாசா விஞ்ஞானிகளும் உறுதி செய்து அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
மேலும் இது குறித்து மதுரையை சேர்ந்த கணினி என்ஜினீயர் சண்முக சுப்பிரமணியன், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
&
Shanmuga Subramanian,an amateur astronomer from Chennai who has discovered debris of Chandrayaan-2's Vikram Lander on surface of the moon:I was able to find something out of the ordinary in a particular spot,so,I thought this must be the debris. I got confirmation from NASA today pic.twitter.com/8WBAZvNkRn
— ANI (@ANI) December 3, 2019
நாசாவின் புகைப்படங்களில் உள்ள புள்ளிகளை ஆய்வு செய்து விக்ரம் லேண்டர் பாகங்களை கண்டறிந்தேன். எனது கண்டுபிடிப்பை நாசா இன்று உறுதி செய்து அறிவித்தது.