ஹரியானா வன்முறை... கல்வீச பயன்படுத்தப்பட்ட ஹோட்டல் இடிப்பு... அரசு அதிரடி!

ஹரியானாவின் நூ மாவட்டத்தின் விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தினர் பேரணி நடத்தினர். இப்பேரணி மீது சில இஸ்லாமிய தீவீரவாதிகள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து ஹரியானாவில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 6, 2023, 06:10 PM IST
ஹரியானா வன்முறை... கல்வீச பயன்படுத்தப்பட்ட ஹோட்டல் இடிப்பு... அரசு அதிரடி! title=

ஹரியானாவின் நூ மாவட்டத்தின் விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தினர் பேரணி நடத்தினர். இப்பேரணி மீது சில இஸ்லாமிய தீவீரவாதிகள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து ஹரியானாவில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ஹரியானாவில் இண்டர்நெட் சேவை தடை மேலும் சிலநாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஹரியானா முழுவதும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 216 ஆகவும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஹரியானாவின் நுஹ்வில் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிரான அவர்களின் இயக்கத்தைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அங்கு நடந்த வன்முறையின் போது கற்களை வீசுவதற்கு குண்டர்களால் பயன்படுத்தப்பட்ட ஒரு உணவகம் மற்றும் ஹோட்டலை இடித்துள்ளனர். இடிப்பு நடவடிக்கையின் போது அப்பகுதியில் காவல்துறையினரின் குழுவும் நிறுத்தப்பட்டது. இது குறித்து மாவட்ட நகர திட்டமிடுபவர் வினேஷ் குமார் கூறுகையில், "சஹாரா குடும்ப உணவகத்தின்" வணிக கட்டிடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டது. ஆன்மீக ஊர்வலத்தின் மீது குண்டர்கள் கற்களை வீசிய அதே கட்டிடம் இது என்று அவர் கூறினார். "கட்டிடமானது முற்றிலும் அங்கீகரிக்கப்படாதது, அதற்கு அரசு மற்றும் துறையால் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஹோட்டல் மற்றும் உணவகம் முற்றிலும் அங்கீகரிக்கப்படாதது. குண்டர்கள் இங்கிருந்து யாத்திரை மீது கற்களை வீசினர். எனவே, இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது," குமார் கூறினார்.

முன்னதாக சனிக்கிழமை காலை, நல்ஹார் சாலை பகுதியில் உள்ள 45 க்கும் மேற்பட்ட "சட்டவிரோத" கடைகளை நூஹ் மாவட்ட நிர்வாகம் இடித்தது. ஹரியானாவின் நுஹ் மாவட்டத்தில் ஜூலை 31 அன்று இரு குழுக்களுக்கிடையில் வன்முறை வெடித்தது.  திங்களன்று நூஹ் நகரில் நடந்த வன்முறையில் இரண்டு ஊர்க்காவல் படையினர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையில், நூஹில் இணையத் தடை செவ்வாய்க்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஹரியானா வன்முறை.... மயிரிழையில் உயிர் தப்பிய ஹரியானா நீதிபதியும் அவரது மகளும்!

முன்னதாக வெள்ளிக்கிழமை, ஹரியானா காவல்துறை திங்கள்கிழமை ஹரியானாவின் நுஹ் மாவட்டத்தில் வன்முறை மற்றும் கலவரம் தொடர்பாக 141 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 55 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். திங்களன்று இரு குழுக்களுக்கிடையில் வெடித்த வன்முறையில் 2 போலீஸ் ஊர்க்காவல்படையினர் உட்பட 6 பேர்  இறந்தனர். மேலும் 88 பேர் காயமடைந்துள்ளனர் என்று போலீசார் மேலும் தெரிவித்தனர்.

முதல்வர் கட்டார் விடுத்துள்ள எச்சரிக்கை

முன்னதாக, பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியவர்களிடம் இருந்து இழப்பீடு பெறப்படும் என முதல்வர் மனோகர் லால் தெரிவித்தார். அதே நேரத்தில், வன்முறை வெடித்ததையடுத்து, ஹரியானாவின் 9 மாவட்டங்களில் 144 தடைச் சட்டம் அமல் படுத்தப்பட்டது. இன்னும் பல நகரங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. நூஹ், ஃபரிதாபாத், பல்வால் மற்றும் ஹரியானாவின் மானேசர் மற்றும் சோஹ்னா, பட்டோடி ஆகிய பகுதிகளில் இணைய சேவை தடை செய்யப்பட்டது. இதற்கிடையில், அனைத்து பிரிவினரும் அமைதி காக்க வேண்டும் என்று ஹரியானா முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் படிக்க | மாணவியின் வாட்டர் பாட்டிலில் சிறுநீர் கலந்த மாணவர்கள்! சமூக பிரச்சனையாக மாறிய சம்பவம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News