காலவரையற்ற லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் துவங்கியது!

பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்!  

Last Updated : Jul 20, 2018, 10:12 AM IST
காலவரையற்ற லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் துவங்கியது! title=

பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்!  

பெட்ரோல், டீசல் விலைகளை குறைப்பது மற்றும் 3 மாதங்களுக்கு ஒருமுறை நிர்ணயிப்பது, அதை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவருவது, சுங்க கட்டணங்களை ஆண்டுக்கு ஒருமுறை 18 ஆயிரம் கோடியாக பெற்றுக்கொள்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்றுமுதல் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளது.

இதற்கு, தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது. வேலை நிறுத்தம் காரணமாக நாமக்கல்லில் லாரிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் நான்கரை லட்சம் லாரிகள் ஓடாது என்றும், நாடுமுழுவதும் 65 லட்சம் லாரிகள் இயக்கபடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாளொன்றுக்கு லாரி உரிமையாளர்களுக்கு 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Trending News