1947 ஆகஸ்ட் 14 நள்ளிரவு.., " இந்திய நாட்டின் முதல் பிரதமராக சுதந்திர கொடியை முதலில் ஏற்றிய பிரதமராக மறைந்த ஜவஹர்லால் நேரு உரையாற்றினார். அப்போது அவர் "நீண்ட நெடுங்காலத்துக்கு முன் "விதியோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டோம்". அந்த ஒப்பந்தத்திலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது. இரவு 12 மணி அடிக்கும்போது உலகம் உறங்கி கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியா உயிர்த்துடிப்போடு சுதந்திரத்தில் கண் விழிக்கும்" என உறுதிமொழி எடுத்தார்.
அந்த உறுதி மொழிக்குப் பிறகு ஆண்டு தோறும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. 74 ஆண்டுகளை கடந்து வரும் 15ஆம் தேதியோடு இந்திய நாடு சுதந்திரம் பெற்று 75 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. அன்று நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்களையும், தியாகிகளையும் நினைவால் முன் நிறுத்தி நாடு முழுவதும் மூவர்ணக்கொடியை வான் உயர பறக்க விட்டு மறியாதை செலுத்தவுள்ளோம். இந்த சுதந்திரத்தை நாம் பெற்றுக்கொள்ள பலர் ரத்தம் சிந்தியுள்ளார்கள் என்பது நமக்கு தெரிந்திருந்தாலும் காலனித்துவ ஆட்சியின் நுகத்தடியை தூக்கி எறிய, இந்தியா மேற்கொண்ட முயற்சிகளில் குறிப்பிடத்தக்க பல நிகழ்வுகள் அரங்கேறி இருக்கின்றன. சுதந்திர வேட்கையில் இந்தியா என்றென்றும் அடிபணியாது எனும் வீர முழக்கத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் நம்பும் விதமாக நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகள் இருக்கின்றன.
முதல் சுதந்திரப்போர் :
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக முதன் முதலில் நடந்தப்பட்ட போர் சிப்பாய் கலகம்.நாட்டின் நான்கு திசைகளில் இருந்தும் போர் குணமும் விடுதலை வேட்கையும் கொண்ட தலைவர்களின் கீழ் ஒரு சிப்பாய்கள் படை வலுவாக அமைந்தது. டெல்லியில் பகதூர் ஷா, பராக்பூரில் மங்கள் பாண்டே, கான்பூரில் நானா சாஹீப், ஜான்சியில் ராணி லக்ஷ்மிபாய் என பெண் போராளிகள் உட்பட பலர் காலத்துவ ஆட்சிக்கு எதிராக படை திரட்டி கிளம்பினர்.
மேலும் படிக்க | சேதமடைந்த சான்றிதழ்களை திருப்பி வழங்க நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஸ்
1857ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி தொடங்கிய சிப்பாய் கலகத்தால் கதி கலங்கிய கிழக்கிந்திய கம்பெனி தனது அதிகாரத்தை முழுமையாக பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு கை மாற்றியது. இதனை தொடர்ந்து இந்தியா பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நேரடி ஏகாதிபத்திய ஆட்சியின் கீழ் வந்து தனது சுதந்திரத்திற்கான முதல் படியில் கால் பதித்தது.
இந்திய தேசிய காங்கிரஸின் உருவாக்கம்:
1885 டிசம்பர் 28 அன்றுதான் இந்திய தேசிய காங்கிரஸின் முதல் அமர்வு பம்பாயில் உள்ள கோகுல்தாஸ் தேஜ்பால் சமஸ்கிருதக் கல்லூரியில் கூடியது. ஆரம்பத்தில் ஒரு இயக்கமாக தொடங்கப்பட்டு பின் நாளில் மாபெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், இந்திய தேசிய காங்கிரஸ் தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது. ஆகையால் இந்திய தேசிய காங்கிரஸின் முதல் அம்ரவும், நாட்டின் சுதந்திரத்திற்கான முக்கிய நிகழ்வுதான் எனக்கூறலாம்.
ஒத்துழையாமை இயக்கம்:
1915ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்த மகாத்மா காந்திக்கு நாட்டில் சுதந்திரத்திற்காக நடக்கும் போராட்டம் புதிய உத்வேகம் பெற்றிருந்ததை மகிழ்ச்சியளித்தது. இதனை தொடர்ந்து அவர் நாடு தழுவிய ஒரு இயக்கத்தை உருவாக்கினார். அந்த இயக்கத்திற்கு ஒத்துழையாமை இயக்கம் என பெயர் சூட்டி பல அறிவுறுத்தல்களையும் முன்வைத்தார்.
குறிப்பாக பிரிட்டிஷ் உற்பத்திப் பொருட்களை புறக்கணித்து இந்திய நாட்டின் உற்பத்தி பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டது. அதேபோல, பிரிட்டீஷ் அரசின் எவ்வித செயல்களுக்கும் யாரும் ஒத்துழைப்பு வழங்கக்கூடாது, நீதிபதிகள் உள்ளிட்ட யாரும் பணிக்கு செல்லக்கூடாது. அரசின் கூட்டங்களில் மக்கள் பங்கேற்கக்கூடாது உள்ளிட்டவை இடம் பெற்றன. இளைஞர்கள் பெண்கள் என அனைவரும் ஒன்றினைந்த இந்த இயக்கம் சுதந்திரத்திற்கான முக்கிய பங்காற்றியது.
சட்டமறுப்பு இயக்கம்:
பிரிட்டிஷ் அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட கடுமையான வரிகளுக்கு எதிராக கடந்த 1930ஆம் ஆண்டு மகாத்மா காந்தியால் உருவாக்கப்பட்டதே சட்டமறுப்பு இயக்கம். காலனித்துவ ஆட்சியாளர்களால் விதிக்கப்பட்ட சட்டங்களை அவர்களின் அடக்குமுறையையும் மீறி அகிம்சை வழியில் மறுப்பு தெரிவித்து எதிர்த்து நின்றது இந்த இயக்கம். இந்த இயக்கம் கீழ்படியாமை இயக்கத்தின் ஆரம்பமாகவும் அமைந்தது.
மேலும் படிக்க | 75வது சுதந்திர தினம்: சென்னை ஐகோர்ட்டில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்
பம்பாய் கலகம்:
இரண்டாம் உலகப் போர் முடிவுற்றது. வெள்ளையனே வெளியேறு இயக்கமும் ஒடுக்கப்பட்டது. இருந்தபோதும் நாடெங்கும் சுதந்திர போராட்டம் மட்டும் நிற்கவில்லை. சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான இந்திய ராணுவம் அங்கிலேயர்களுக்கு எதிராக நின்று போர் செய்ததால் அவர்கள் மீது காலத்துவ அரசு வழக்குப் பதிவு செய்து வீரர்களை சிறை வதைக்கு உட்படுத்தியது. இவர்களை மீட்டெடுக்க ஜவகர்லால் நேரு போன்ற வழக்கறிஞர்கள் தங்கள் முழு நேர பங்களிப்பையும் வழங்கினர்.
இதன் எதிரொலியாக நாடு முழுவதும் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான கொந்தளிப்பை மக்கள் மத்தியில் உருவாக்கியது. அதன் தொடர்ச்சியாக, இந்த வெறுப்புணர்வு பிரித்தானிய இந்தியாவின் படைப்பிரிவுகளிலும் பரவி பம்பாயில் பெரும் கலகம் வெடித்தது. அவர்களின் சில கப்பல்களும் கடற்படைத் தளங்களும் கலகக்காரர்களின் கட்டுப்பாட்டில் வந்தன. தொடர்ந்து பிரித்தானிய கடற்படைக் கொடி, அவர்களின் கப்பல்களிலிருந்தும், கடற்படைத் தளங்களிலிருந்தும் அகற்றப்பட்டு பொதுவுடமைக் கட்சியின் செங்கொடி ஏற்றப்பட்டது. இந்த பம்பாய் கலகம் இந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்களிப்பாக அமைந்தது.
மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு 34 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு! முழு விவரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ