UN மனித உரிமை குழு தேர்தலில் இந்தியா வெற்றி...!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவைக்கு இந்தியா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தேர்தலில் இந்தியா அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது..! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 13, 2018, 10:32 AM IST
UN மனித உரிமை குழு தேர்தலில் இந்தியா வெற்றி...!  title=

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவைக்கு இந்தியா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தேர்தலில் இந்தியா அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது..! 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைய தேர்தலுக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1, 2019 முதல் 3 ஆண்டுகளுக்கு, மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராக பதவி வகிக்கும் இந்தியா. இது குறித்து வாக்கெடுப்பின் போது, 188 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக வாக்களித்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

சுமார் 193 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா சபையில், மனித உரிமை ஆணையத்துக்குத் தேர்ந்தெடுக்க ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. கவுன்சிலில் உறுப்பினராக இடம் பெற 97 வாக்குகள் வேண்டும் என்கிற நிலை இருக்கிறது. ஆனால் இந்தியா மிக அதிகமான உறுப்பு நாடுகளின் ஆதரவுடன், ஐநா மனித உரிமைகள் குழுவில் உறுப்பினராக இணைந்துள்ளது.

இந்தியாவை தொடர்ந்து பிஜி(187), வங்கதேசம் (178), பக்ரைன் மற்றும் பிலிப்பைன்ஸ் (165) பெற்றுள்ளன.ஏற்கனவே ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமைக் குழுவில் இந்தியா இரண்டு முறை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே நியூயார்க்கில் செய்தியாளர்களை சந்தித்த இந்தியாவுக்கான ஐநாதூதர் சையத் அக்பரூதீன் இந்தியாவுக்கு ஓட்டளித்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.மனித உரிமைகளை காப்பதில் இந்தியா உறுதியுடன் செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Trending News