CMS-01 செயற்கைக்கோளை சுமந்தபடி விண்ணில் சீறிப்பாய்ந்தது PSLV-C50..!!!

ஆந்திர பிரதேசத்தில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி எஸ் எல் வி ராக்கெட்  இன்று பிற்பகல் திட்டமிட்ட நேரத்தில் விண்ணில் சீறிப்பாய்ந்தது.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 17, 2020, 07:33 PM IST
  • பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் 44.4 மீட்டர் உயரம் கொண்டது.
  • இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட நடவடிக்கை, இந்திய விண்வெளி வரலாற்றில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
  • இந்த செய்ற்கைக்கோள் இந்தியாவின் 42வது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஆகும்.
CMS-01 செயற்கைக்கோளை சுமந்தபடி விண்ணில் சீறிப்பாய்ந்தது PSLV-C50..!!! title=

ஸ்ரீஹரிகோட்டா: ஆந்திர பிரதேசத்தில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி எஸ் எல் வி ராக்கெட்  இன்று பிற்பகல் திட்டமிட்ட நேரத்தில் விண்ணில் சீறிப்பாய்ந்தது.  இது இந்திய விண்வெளி வரலாற்றில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) , 1,410 கிலோ எடை கொண்ட சி.எம்.எஸ்.-01 (CMS-01) என்ற தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை வடிவமைத்து உள்ளது.  ஆந்திர பிரதேசத்தில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி எஸ் எல் வி ராக்கெட்  இன்று பிற்பகல் திட்டமிட்ட நேரத்தில் தொலைத் தொடர்பு செயற்கைக்கோள், இன்று மாலை விண்ணில் ஏவப்பட்டது. இந்த செய்ற்கைக்கோள் இந்தியாவின் 42வது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஆகும்.

இந்த செயற்கைக்கோள், அந்தமான் மற்றும் நிகோபர், லட்சத்தீவுகள்  உட்பட இந்திய பகுதிகளில் நீட்டிக்கப்பட்ட-சி பேண்ட் சேவைகளை வழங்கும் நோக்கில் இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டு உள்ளது.மேலும் கல்வி, மருத்துவம், பேரிடர் மேலாண்மை, ஆகிய பணிகளுக்குத் தேவையான தரவுகளை பெறுவதற்காகவும் இந்த செயற்கைக்கோள் அனுப்பப்பட்டுள்ளது.

பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட்  (PSLV C-50) 44.4 மீட்டர் உயரம் கொண்டது. இதில் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு உள்ளன. இது இந்தியாவின் 52-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும். இதனை விண்ணில் செலுத்துவதற்கான 25 மணிநேர கவுண்ட்டவுன் நேற்று பகல் 2.41 மணிக்கு தொடங்கியது. அப்போதில் இருந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இன்று மாலை 3.41 மணிக்கு ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது.  

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ (ISRO) தலைவர் சிவன், "தனியார் துறையின் பங்களிப்புடன் தொடங்கப்படும் முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு வரும் புதிய செயற்கைக்கோளான ஆனந்த் விரைவில் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா, சதீஷ்சாட், யூனிட்டிசாட் ஆகியவையும் அடுத்தடுத்து விண்ணில் செலுத்தப்படவுள்ளது" என்று தெரிவித்தார்.

சந்திரயான் 3, ஆதிகேசவன், ககன்யான் போன்ற செயற்கைக்கோள் திட்டப்பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் இஸ்ரோ தலைவர் கூறினார்.

ALSO READ | உய்குர் முஸ்லிம்களை அடையாளம் காண சாப்ட்வேரை உருவாக்கியுள்ளது சீனாவின் அலிபாபா

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News