6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு GDP வளர்ச்சி 4.5 சதவீதமாக குறைந்தது

இந்த வருட ஜூலை - செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில்  மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5 சதவீதமாக உள்ளது. 

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Nov 29, 2019, 07:30 PM IST
6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு GDP வளர்ச்சி 4.5 சதவீதமாக குறைந்தது
கோப்புப்படம்

புது டெல்லி: இந்த வருட ஜூலை - செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5 சதவீதமாக உள்ளது. இதே காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 2018-19 ஆம் ஆண்டின் 7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜிடிபி குறைந்துள்ளது. அதாவது 2012-13 ஆம் ஆண்டு ஜனவரி - மார்ச் காலகட்டத்தில் 4.3 சதவீதமாக GDP வளர்ச்சி இருந்தது.

இந்த நிதியாண்டின் ஜூலை - செப்டம்பர் மாத காலகட்டத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேலும் சரிந்துள்ளது. இந்த ஆண்டு ஜூலை - செப்டம்பர் மாதங்களில் ஆறு ஆண்டுகளுக்கும் குறைவான 4.5 சதவீதத்தை எட்டியுள்ளது என்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்பு 2012-13 ஆம் ஆண்டு ஜனவரி - மார்ச் காலகட்டத்தில் குறைவான 4.3 சதவீதமாக பதிவாகியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 2018-19 ஆம் ஆண்டின் இதே காலாண்டில் 7 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆறு மாத காலப்பகுதியில் (ஏப்ரல் - செப்டம்பர் 2019) இந்திய பொருளாதாரம் 4.8 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. இதே காலகட்டத்தில் ஒரு வருடத்திற்கு முன்பு 7.5 சதவீதமாக இருந்தது.

ரிசர்வ் வங்கி 2019-20 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி திட்டத்தை 6.9 சதவீதமாக இருக்கும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அது 6.1 சதவீதமாக இருக்கிறது.

அதேபோல சீனாவின் பொருளாதார வளர்ச்சி 2019 ஜூலை - செப்டம்பர் மாதங்களில் 6 சதவீதமாக இருந்தது. இது கடந்த 27 ஆண்டுகளில் பலவீனமான வளர்ச்சியாகும்.