ஐ.என்.எஸ் விராட் போர்க்கப்பல் இன்றுடன் ஓய்வு

விமான தாங்கி கப்பலான ஐ.என்.எஸ் விராட் இன்று ஓய்வுபெறுகிறது. இந்த விழ மும்பையில் இன்று நடக்கிறது.

Last Updated : Mar 6, 2017, 10:38 AM IST
ஐ.என்.எஸ் விராட் போர்க்கப்பல் இன்றுடன் ஓய்வு title=

புதுடெல்லி: விமான தாங்கி கப்பலான ஐ.என்.எஸ் விராட் இன்று ஓய்வுபெறுகிறது. இந்த விழ மும்பையில் இன்று நடக்கிறது.

ஐ.என்.எஸ் விராட் இந்தியாவிடம் பயன்பாட்டிலுள்ள இரு வானூர்தி தாங்கிக் கப்பல்களில் ஒன்றாகும். 

போர்க்காலத்தில் ஒரே நேரத்தில் 18 போர் விமானங்களை விராட்டிலிருந்து செலுத்த முடியும். தெற்காசிய பிராந்தியத்தில் மிகவும் வலுவான, சக்தி வாய்ந்த விமானம் தாங்கிப் போர்க் கப்பலாக விராட் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

விமான தாங்கி போர் கப்பலான ஐ.என்.எஸ் விராட், 1987-ம் ஆண்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. அதற்கு முன் இக்கப்பல் 27 ஆண்டுகள் பிரிட்டிஷ் கடற்படையில் சேவை புரிந்து. இக்கப்பல் 1943-ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது உருவாக்கப்பட்டதாகும்.

உலகின் மிகப் பழமையான விமானம் தாங்கி போர் கப்பலாக கருதப்படும் ஐ.என்.எஸ் விராட், 30 ஆண்டுகள் இந்திய கடற்படையில் சேவை ஆற்றி உள்ளது. மிக நெருக்கடியான சமயங்களில் நாட்டை பாதுகாக்க உதவிய இக்கப்பல் இன்று தனது சேவையை நிறைவு செய்கிறது. இனி இக்கப்பலை போர்க்கப்பலாக பயன்படுத்த முடியாது. 

இந்நிலையில் இனி இக்கப்பல் அருங்காட்சியகமாகவோ அல்லது ஓட்டலாகவோ உருமாற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இன்று மாலை நடக்கும் ஐ.என்.எஸ் விராட் வழியனுப்பு விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் கலந்து கொள்ள உள்ளார்.

Trending News