லாலு பிரசாத் மீதான IRCTC முறைகேடு வழக்கில் ஜனவரி 28 தீர்ப்பு!!

IRCTC முறைகேடு வழக்கில் பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ஜாமின் மனு தொடர்பாக வரும் 28-ம் தேதி டெல்லி பாட்டியாலா கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது.

Last Updated : Jan 19, 2019, 05:55 PM IST
லாலு பிரசாத் மீதான IRCTC முறைகேடு வழக்கில் ஜனவரி 28 தீர்ப்பு!!

IRCTC முறைகேடு வழக்கில் பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ஜாமின் மனு தொடர்பாக வரும் 28-ம் தேதி டெல்லி பாட்டியாலா கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது.

பீகார் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் ரயில்வே துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது தனது பதவியை பயன்படுத்தி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

IRCTC-க்கு சொந்தமான ஐ.ஆர்.சி.டி.சி. ஓட்டல்களை பராமரிக்க தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக லாலு பிரசாத் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து அந்த வழக்கு விசாரணை டெல்லி பாட்டியாலா கோர்டில் நடைபெற்றது.

இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் வழங்குமாறு பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் டெல்லி பாட்டியாலா கோர்ட்டிடம் கோரியிருந்தார். அதன்படி வரும் ஜனவரி 28-ம் தேதிக்கு இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என்று கோர்ட் அறிவித்துள்ளது.

More Stories

Trending News