ராணுவ பயன்பாட்டுக்கு உதவும் செயற்கைக் கோள் உள்ளிட்ட 2 செயற்கைக்கோள்களுடன், PSLV-C44 ராக்கெட் இன்று நள்ளிரவில் விண்ணில் செலுத்தப்படுகிறது.
பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான DRDO பயன்பாட்டிற்காக மைக்ரோசாட்-ஆர் என்ற செயற்கைக் கோள் இன்று இரவு 11.37 மணிக்கு PSLV-C44 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. கலாம்சாட் என்ற மாணவர்கள் தயாரித்த செயற்கைக்கோளும் இதனுடன் செலுத்தப்பட உள்ளது. இதற்கான 28 மணி நேர கவுண்ட் டவுன் நேற்றிரவு 7.37 மணிக்குத் தொடங்கியது. ராக்கெட்டை செலுத்துவதற்கான இறுதிக் கட்டப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்த இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, புதிய தொழில்நுட்பம் மூலமாக இந்த செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார். நடப்பாண்டில் சந்திரயான்-2 உள்பட 32 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டிருப்பதாகவும் சிவன் தெரிவித்துள்ளார்.
The Indian Space Research Organisation (ISRO) will launch its 46th flight of Polar Satellite Launch Vehicle (PSLV-C44) today
Read @ANI Story| https://t.co/yNFYGy98lb pic.twitter.com/ukbOaiCJAY
— ANI Digital (@ani_digital) January 24, 2019